Bihar Hindus Muslims

பீஹார்: உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலைக் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம் குடும்பத்தார்!

நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தார், மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான விராட் ராமாயண் கோவில் கட்டுவதற்காக ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்னாவை தளமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால், நிலத்தை நன்கொடையாக வழங்கிய இஷ்தியாக் அகமது கான், குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் […]

Bihar BJP

குறைகளை செவிசாய்க்காத அதிகாரிகளை மூங்கில் குச்சிகளை கொண்டு அடியுங்கள்- பாஜக மத்திய அமைச்சர் ஆலோசனை ..

மக்கள் குறைகளை செவிசாய்காத அதிகாரிகளை பொதுமக்கள் “மூங்கில் குச்சிகளைக் கொண்டு அடிக்குமாறு” அறிவுறுத்தி உள்ளார் பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். சனிக்கிழமை பீகார், கோடவந்த்பூரில் ஒரு வேளாண் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் உரையாற்றியபோது இந்த கருத்தை தெரிவித்தார். மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை இலாகாக்களின் அமைச்சரான அவர் பொது மக்களிடமிருந்து அடிக்கடி புகார்கள் வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலும் புகார்களுக்கு சிறிதும் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். “நான் […]

பீகார்: வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி !
Bihar

பீகார்: வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி !

பாட்னாவில் திங்களன்று “ரோஜ்கர் மற்றும் சிக்ஷா” (வாழ்வாதாரம் மற்றும் கல்வி) கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இடதுசாரி கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பொலிஸ் நடத்திய லாதிச்சார்ஜில் பலர் பலத்த காயமடைந்தனர். சிபிஐ (எம்.எல்) இன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் இந்த எதிர்ப்பு ஊர்வலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து தீர்வு காண பீகார் சட்டமன்றத்தை முற்றுகையிட சென்று கொண்டிருந்த நிலையில் இந்த தடியடி நடத்தப்பட்டுள்ளது. பாட்னாவின் மையப்பகுதியான காந்தி மைதானம் […]

'பொது மக்கள் கார்களை ஒட்டுவதில்லை, விலையேற்றத்தை பழக்கப்படுத்தி கொள்வார்கள்'- பாஜக அமைச்சர் கருத்து !
Bihar BJP Intellectual Politicians

‘பொது மக்கள் கார்களை ஒட்டுவதில்லை, விலையேற்றத்தை பழக்கப்படுத்தி கொள்வார்கள்’- பாஜக அமைச்சர் கருத்து !

பொது மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதால் இந்த உயர்வு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், பாஜக தலைவரும் பீகார் அமைச்சருமான நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார். “பொது மக்கள் பெரும்பாலும் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள், ஒரு சிலர் மட்டுமே தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள்,” என்று திரு பிரசாத் கூறினார். மேலும் பொது மக்கள் இந்த விலை ஏற்றத்திற்கு எதிராக இல்லை அரசியல்வாதிகள் தான் விலையேற்றத்திற்கு எதிராக ஆயுதம் […]

தாய் உயிரோடு உள்ளதாக எண்ணி அருகே சென்ற குழந்தை குடும்பத்தாருக்கு லாலு பிரசாத் மகன் ரூ. 5 லட்சம் நிதி உதவி ..
Bihar Political Figures

தாய் உயிரோடு உள்ளதாக எண்ணி அருகே சென்ற குழந்தை குடும்பத்தாருக்கு லாலு பிரசாத் மகன் ரூ. 5 லட்சம் நிதி உதவி ..

நெடுநாள் பசி, தாகம் மற்றும் நீண்ட தூரப் பயணம் காரணமாக நீரிழப்பு ஆகியவற்றால் சில தினங்களுக்கு முன்பு இரயிலில் இறந்த ஒரு பெண்ணை, தாய் இறந்ததை அறியாத குழந்தை எழுப்ப முயலும் காணொலி வெளியாகி கல் நெஞ்சையும் கரைய வைத்தது. குஜராத்திலுள்ள அஹமதாபாத்திலிருந்து பிஹாரிலுள்ள முஸாஃபர்பூருக்கு கடந்த திங்களன்று புலம் பெயர் தொழிலாளிகளுக்கான ஷ்ரமிக் ரயில் மூலம் வந்த அர்பினா காத்தூன் என்ற 35 வயது பெண்மணி மனிதாபிமானமற்ற அரசின் அலட்சியத்தால் பசியால் ஒட்டிய வயிறோடு உயிரை […]

bihar caa
Bihar CAA NRC

பிஹார் : CAA,NRC கணக்கெடுப்பாக இருக்கலாம் என்று எண்ணி குழுவினரை சிறைபிடித்த மக்கள்..

குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகிவற்றிற்கு எதிராக பீகாரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் பரவி வருவதால், தனியார் ஆராய்ச்சி மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கணக்கெடுப்புகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான கணக்கெடுப்பை மேற்கொண்டால் மக்களால் தாக்கப்படலாம் என்ற அச்சமும் மாநிலம் முழுவதும் நிலவுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக சர்வே மேற்கொள்ள வந்த சிலரை என்.பி.ஆர் அதிகாரிகள் […]

muslim judges bihar
Bihar Muslims

7 பெண்கள் உட்பட 22 முஸ்லிம்கள் நீதிபதிகளாக தேர்வு- பீகாரில் சாதனை!

பீகாரில் நடைபெற்ற நீதித்துறை சேவைகளுக்காக நடைபெற்ற தேர்வில் 22 முஸ்லிம் இளைஞர்கள் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 7 பெண் முஸ்லிம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்திய நீதித்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இத்தகைய வெற்றி என்பது மகிழ்ச்சியானதென மூத்த வழக்கறிஞர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். மேலும் சனம் ஹயாத் என்ற மாணவி முதல் பத்து இடங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக உ.பி யில் […]

muslim bihar lynching
Bihar Lynchings

கும்பல் வன்முறை : பிஹார் மாநிலத்தில் ஜமால்(30) அடித்து கொலை!

பிஹார் மாநிலம் ஹாஜ்பூர் முபாசில் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஜமால்(30), திங்கள்கிழமை (11-11-19) மாலை 18 மாடுகளுடன் மேற்குவங்கத்தை நோக்கி தனது சகோதரர் கமல் மற்றும் வேறொரு நபருடன் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, சாகர் யாதவ் மற்றும் அவரது மூன்று மகன்கள் லாபா பாலத்தை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கக் முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர்.இதனை அடுத்து லத்திகள், மற்றும்  காம்புகளை கொண்டு  கடுமையாக அடித்து, கால்நடைகளை இழுத்து சென்று விட்டனர். முஹம்மத் ஜமாலின் சகோதரர் […]

Bihar lynching
Bihar Lynchings States News

பீகாரில் கால்நடையை கடத்த வந்ததாக சந்தேகித்து மூன்று நபர்கள் அடித்து கொலை !

சமீப காலமாக வடஇந்தியாவில் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டு கும்பல் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. பீகார் மாநிலத்தின் பனியாபூர் பகுதியில் (இன்று ) வெள்ளிக்கிழமை (19.7.19)காலை கால்நடைகளை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து மூன்று பேரை ஊர் மக்களில் ஒரு கும்பல் அடித்து கொன்றுள்ளனர் பனியாபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் அதிகாலை வேலையில் இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர்கள் ராஜு நாத் , பைட்ஸ் நாத் மற்றும் நவ்ஷாத் குரேஷி […]