CAA Political Figures

முஸ்லிம்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தவே மே.வங்கத்தில் சிஏஏ வை அமல்படுத்துவோம் என்கிறது பாஜக – ப. சிதம்பரம் விமர்சனம் !

மே.வங்க தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள கருத்து கீழே வழங்கப்படுகிறது. மேற்கு வங்க தேர்தல் அறிக்கையில் பாஜக தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாஜக அரசு அமைக்கப்பட்டு முதல் நாளில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த ஒப்புதல் வழங்குவோம் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. […]

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவா? - ஓர் அலசல் பார்வை
CAA DMK Intellectual Politicians Tamil Nadu

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவா? – ஓர் அலசல் பார்வை

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தை அங்கீகரிக்கின்ற வகையில் இருக்கின்ற வாசகங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ‘இதுதான் நியாயமா?’ என நல்லிதயங்களைத் துடிக்க வைப்பவையாய் இருக்கின்றன. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டு பாகுபாடு காட்டுவது திராவிட சித்தாந்தத்துக்கு நேர் எதிரானதாகும். அதற்குத் துணை போகின்ற வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருப்பது தகுமா? இந்திய வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த சிஏஏ எதிர்ப்பு மக்கள் போராட்டத்தையும், தன்னெழுச்சியாக நடந்த மகளிர் ஷாஹீன் பாக் போராளிகளையும், உயிரையே […]

சீமான் கண்டனம்
CAA Political Figures Tamil Nadu

சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு, காரணம் என்ன ?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சீமான் மீது கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில், சனிக்கிழமை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமானின் பேச்சு இரு சமூகங்களிடையே வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிட்டதாகவும் அது அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டபட்டுள்ளது. சீமான் மீது தேச துரோக […]

டெல்லி: லக்கடவுனில் வேட்டையாடப்படும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்; கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு 20 க்கும் மேற்பட்ட திரைத்துறையினர் கூட்டறிக்கை..
Activists Arrests CAA

டெல்லி: லாக்டவுனில் வேட்டையாடப்படும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்; கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு 20 க்கும் மேற்பட்ட திரைத்துறையினர் கூட்டறிக்கை..

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை எதிர்த்து ஜனநாயக உரிமையின் அடிப்படையில் போராடியதற்காக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை தற்போது டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், மகேஷ் பட், ரத்னா பதக் ஷா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட திரைப்பட பிரமுகர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளனர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்ததாகக் கூறி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களான மீரன் ஹைதர் மற்றும் சஃபூரா சர்கர் […]

உபி போலீஸ் அராஜகம் பெண் போராட்டக்கார்கள் மீது தடியடி
CAA NPR NRC Opinion

“சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்டங்களால் பெண்களுக்கே அதிக பாதிப்பு”

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்ட திட்டங்கள் பெண்களுக்கு எதிரானவை, அது எப்படி என்கிறீர்களா? முதலில் ஒரு பொதுவான விஷயத்தை தெரிந்து கொள்வோம்: உலகில் எந்த நன்மை நடந்தாலும் அதில் முதலாவது மற்றும் அதிகப் பயன் பெறுவது ஆண்கள்தான். உதாரணத்துக்கு இந்தியாவில் பள்ளிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப் பட்ட பொழுது ஆண்கள்தான் முதலில் கல்வி கற்க அனுப்பப் பட்டனர். நவீன உடை இந்தியாவுக்கு வந்த பொழுது சமூகத்தில் எந்த முணுமுணுப்பும் இன்றி ஆண்கள்தான் சௌகரியமான பேண்ட் சட்டைக்கு மாறினார்கள். […]

பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டும்”: பா.ஜ.க பேரணிக்கு பயந்து பிரியாணி கடைக்காரர்கள் போலிஸிடம் மனு
CAA Tamil Nadu

திருப்பூர் சிஏஏ ஆதரவு பேரணி எதிரொலி : பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி புகார் மனு.

நாடு முழுவதும் பாஜகவின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக தொடர் எழுச்சி போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் அதை குலைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஹிந்துத்துவாவினர் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன. நாட்டில் சிஏஏ வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும் எங்குமே மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. எனினும் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் போராட்டங்களில் வன்முறை வெடித்தது, எனினும் அதன் மர்மத்தையும் மக்கள் உணர்ந்தே வைத்துள்ளனர். ஆனால் சிஏஏ […]

கோவா: கத்தோலிக்க திருச்சபை சிஏஏ வுக்கு கடும் எதிர்ப்பு; செய்வதறியாது திகைத்து நிற்கும் கத்தோலிக்க பாஜக எம்.எல்.ஏ க்கள்!!
CAA Christians

கோவா: கத்தோலிக்க திருச்சபை சிஏஏ வுக்கு கடும் எதிர்ப்பு; செய்வதறியாது திகைத்து நிற்கும் கத்தோலிக்க பாஜக எம்.எல்.ஏ க்கள்!!

கடந்த பிப்ரவரி 9 அன்று, கோவாவில் உள்ள கத்தோலிக்க சமூகத்தின் பேராயர் குடியுரிமை திருத்த சட்டம், 2019 க்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். “சிஏஏ சட்டத்தை உடனடியாகவும், எந்த நிபந்தனையுமின்றியும் ரத்து செய்ய வேண்டும். என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஐ செயல்படுத்துவதை கைவிட வேண்டும்” என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறது அந்த அறிக்கை. எனினும் அறிக்கை பரவலாக மீடியாக்களால் கொண்டு செல்லப்படவில்லை. இந்த திருச்சபையின் நிலைப்பாடானது, கோவாவின் சட்டமன்றத்தின் எட்டு கத்தோலிக்க உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்கில் மோசமான […]

அன்டோனியோ குடரெஸ்
CAA

‘இந்தியாவின் சிஏஏ சட்டம் ஏராளமான முஸ்லிம்களை நாடற்றவர்களாக மாற்றக்கூடும்’ – யு.என். பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்

இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் ஏராளமான முஸ்லிம்களை நாடற்றவர்களாக மாற்றக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானில் உள்ள தி டான் செய்தித்தாளுக்கு அவர் அளித்த பேட்டியில், மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்தார், மேலும் புதிய சட்டங்களை உருவாக்கும் போது மனிதாபிமானத்துடன் செயல்படுமாறு உலக நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ளதாக […]

thiruma
CAA Tamil Nadu Thol. Thirumavalavan

சி.ஏ.ஏ: ‘நாளைய சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்போம்’ : தொல் .திருமாவளவன் அறிவிப்பு!

இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் நாளை தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தொல்.திருமாவளவன், எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார். ‘சி.ஏ.ஏ வை நிராகரிப்போம், என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடத்தமாட்டோம்’ என தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு இசுலாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு […]

சி.ஏ.ஏ.வை எதிர்த்து அம்பேத்கர் பேரரான பிரகாஷ் டில்லியில் மாபெரும் பேரணி அறிவிப்பு !
CAA

சி.ஏ.ஏ.வை எதிர்த்து அம்பேத்கர் பேரரான பிரகாஷ் டில்லியில் மாபெரும் பேரணி அறிவிப்பு !

மோடி அரசின் சி.ஏ.ஏ.வை எதிர்த்து வருகிற மார்ச் 4 ம் தேதி டில்லியில் பேரணி அணிவகுப்பு நடத்த அம்பேத்கரின் பேரரான பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ளார். சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசாங்கம் விற்கக்கூடாது என்றும் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பேரணி நடத்த உள்ளார் அவர். ‘நாட்டையும், அரசியலமைப்பையும்’ காப்பாற்றுவதே இந்த பேரணியின் நோக்கம் என பிரகாஷ் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இந்த பேரணி குறித்த […]

சட்டமன்றம் முற்றுகை போராட்டம் எம்.எல் .ஏ தமீமுன் அன்சாரி
CAA Political Figures

சிஏஏ வுக்கு எதிராக பிப்- 19 சட்டமன்றம் முற்றுகை – எம்.எல் .ஏ தமீமுன் அன்சாரி அறிவிப்பு !

மத்திய அரசின் CAA, NRC, NPR ஆகிய குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் இந்தியா முழுதும் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். பல மாநில அரசுகள் இதற்கு எதிராக சட்டமன்றங்களை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ள நிலையில், நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக, காங்கிரஸ், மஜக, IUML உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தை […]

போராடங்களுக்கு தடை விதித்து காவல் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதம் - கர்நாடக உயர் நீதிமன்றம்
CAA Indian Judiciary Karnataka

“போராடங்களுக்கு போலீசார் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது சட்ட விரோதமானது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்..

பெங்களூர் மாநகரில் 3 நாள்களுக்கு (Dec 19 to Dec 21) யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராஜீவ் கவுடா, சவ்மியா ரெட்டி ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த வியாழ கிழமை (13-02-2020) அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரினிவாஸ் அவர்கள், CAA எதிர்ப்பு போராடங்கள் உட்பட எந்த போராட்டங்களும் 3 […]

thiruma
CAA Political Figures Thol. Thirumavalavan

வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – தொல் .திருமாவளவன் அறிக்கை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் . திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவர் அறிக்கை விடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம்; தேசிய மக்கள்தொகைப் பதிவேடு; தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமை திருத்தச் […]

உபி முதல்வர் பயங்கரவாதி யோகி ஆதித்யநாத் சிறுவர்கள் சித்திரவதை சிறையில்
CAA Hindutva Muslims Uttar Pradesh

உபி : தண்ணீர் குடி, ஆனா சிறுநீர் போகக்கூடாது, தூங்கக்கூடாது, கொடூர தயடிகள் என சிறுவர்கள் மீது கொடூரத்தை அரங்கேற்றும் போலீசார்!!

CAA எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எனக்கூறி சிறுவர்கள் மீது வன்முறையை ஏவிய உபி போலீஸ் – உண்மைநிலையறியும் குழு சமர்பித்த ஒரு கள ரிப்போர்ட் உபி மாநிலம் லக்னோ, பிஜ்னோர், முஸாபர்நகர் மற்றும் பிரோஸாபாத் நகரில் கடந்த டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி ஆகிய மாதங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு மிகத்தீவிரமான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன, அவற்றில் அமைதிப்பேரணிகளே அதிகம் எனினும் அப்போராட்டங்களில் கலந்து கொண்டார்கள் என பொய் கூறி, சிறார்கள் சிலரை கைது செய்து அவர்களை […]

mumbai driver uber
CAA

சிஏஏ போராட்டங்கள் குறித்து பேசி வந்த பயணியை போலீசாரிடம் ஒப்படைத்த உபெர் ஓட்டுநர் சஸ்பெண்ட்..

மும்பை : ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். அவர் உபெர் காரில் பயணித்தவாறு நாட்டில் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து அலைபேசியில் பேசிக்கொண்டு வந்துள்ளார். இதை கவனித்த வாகன ஓட்டுநர், பயணியின் தனியுரிமையை மீறும் வகையில் அவரது அனைத்து பேச்சுக்களையும் பதிவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஓட்டுநர் ரோஹித் சிங், காவல் நிலையத்தின் முன் நிறுத்தி, பணத்தை எடுக்க வேண்டும் என்று கூறி நிறுத்தியுளளார். சில நிமிடங்கள் கழித்து, சிங் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் திரும்பியுள்ளார். கீழ்த்தரமாக […]