BJP Karnataka

102 வயது சுதந்திர போராட்ட வீரரை பாகிஸ்தான் ஏஜென்ட் என அழைத்து, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாஜக எம்எல்ஏ அறிவிப்பு ..

கர்நாடகாவின் விஜயபுராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா யட்னல் , 102 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி துரைசாமியை ‘பாகிஸ்தான் ஏஜென்ட்’ என கூறி நாட்டிற்காக போராடியவரை இழிவு படுத்தியுள்ளார். இதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்தும் கூட தனது கருத்துக்கு மன்னிப்பு கோர போவதில்லை என அவர் திமிராக கூறியுள்ளார்.

திரு.துரைசாமி மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த வயதிலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார், அது மட்டுமின்றி போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார், இதை பாஜக வினரால் பொறுத்து கொள்ள முடியாமல் தான் இப்படி அவதூறாக பேசியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ என அம்மாநில மக்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரஜாதிகாரா ஹொரட்டா சமிதி உறுப்பினர்கள் மவுரியா வட்டத்தில் போராட்டம் நடத்தியதோடு, பசனகவுடா யத்னாலை சட்டசபைக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும், அவரது கூற்றுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரியும் பசனக கவுடா திமிராக தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் விதமாக கூறியுள்ளார்..

“ராகுல் காந்தி சாவர்க்கருக்கு எதிராக பேசினார். அவருக்கு நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும். மணி சங்கர் ஐயரை தடை செய்ய வேண்டும். இந்த மக்கள் ‘துக்டே துக்டே’ கும்பலுடன் ஒன்றிணைந்து தேச விரோத மற்றும் அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். துக்டே துக்டே கும்பல் 102 வயதான சுதந்திர போராட்ட வீரரின் படத்தை வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன், ”என்று பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா யட்னல் கூறினார்.

1942 ஆம் ஆண்டில் வெள்ளையேனே வெளியேறு இயக்கத்தில் துரைசுவாமியின் ஈடுபாட்டைப் பற்றியும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டோரெஸ்வாமி ஒரு போலி சுதந்திர போராளி என்றும் பசனகவுடா தெரிவித்தார்.

“டைம் பாம் 1960 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுதந்திர போராளி 1942 இல் இந்த டைம் பாம்களை எப்படி உருவாக்கி இருக்க முடியும் ? எனது பேச்சை திரும்ப பெரும் பேச்சிற்கே இடமில்லை, மன்னிப்பு கேட்க நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை நான் மதிக்கிறேன், ஆனால் போலி சுதந்திர போராளிகளை மதிக்க மாட்டேன் ”என்று பாஜக எம்எல்ஏ திமிராக பேசியுள்ள கருத்து கர்நாடக மக்களை கடும் கோபத்தில் ஆக்கியுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ வின் திமிர் பேச்சு:

பிப்ரவரி மாதம் டவுன் ஹாலில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டத்தில் துரைசுவாமி பங்கேற்றதை அடுத்து பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா யட்னல் கடந்த பிப்ரவரி 25 அன்று துரைசுவாமியை பாகிஸ்தான் ஏஜென்ட் என குறிப்பிட்டார். எனினும் வயசானாலும் ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பதில் முன் அணியில் நின்று பாசிச சட்டங்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார் துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த துரைசுவாமி?

சுதந்திர போராட்டத்தின் போது பழைய மைசூரு பிராந்தியத்தில் பல்வேறு போராட்டங்களை ஏற்பாடு செய்தவர். இயற்பியல் மற்றும் கணித ஆசிரியரான துரைசுவாமி 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தகவல்தொடர்புகளை சீர்குலைக்கும் ஒரு வழியாக போஸ்ட்பாக்ஸ்களுக்குள் குறைந்த சக்தியிலான வெடிபொருட்களை நடவு செய்தவராக அவர் அறியப்படுகிறார்.