Corona Virus Uttar Pradesh

உ.பி: உண்ண உணவின்றி 5 குழந்தைகளையும் கங்கையில் வீசி எறிந்த தாய்; ஊரடங்கில் தவிக்கும் ஏழை மக்கள் !

இன்று உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டம், ஜெகாங்கிராபாத்தில் உள்ள கங்கை நதியில் தனது ஐந்து குழந்தைகளை (ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, சிவசங்கர் மற்றும் கேசவ் பிரசாத்) வீசி எறிந்துள்ளார் ஒரு தாய்.

காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், மூத்த காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்தனர், குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக நதியில் நீச்சல் அடிக்கவல்ல சில டைவர்ஸ் ஈடுபடுத்தப்பட்டனர்.

குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மனநலம் குன்றியதாகத் தெரிகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் (மோடி அரசு முறையான திட்டமிடல் இன்றி அறிவித்துள்ள) லாக்டவுனால் உண்ண உணவின்றி தாயும் குழந்தைகளும் தவித்து வந்ததாகவும், தாய் தினக்கூலி என்பதால் பணமும் சம்பாதிக்க முடியவில்லை அதனால் தான் தாய் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் அவுட்லுக் செய்தி வெளியிட்டுள்ளது.

“எங்கள் முன்னுரிமை, குழந்தைகளை விரைவில் மீட்பது தான். வழக்கு விசாரணையை பின்னர் மேற்கொள்வோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

பிசேர்க்கை (13-4-20):
இந்த செய்தி பரவல் ஆனதை தொடர்ந்து தான் பசி கொடுமையால் குழந்தைகளை வீசி எறியவில்லை என்ற கருத்துப்பட தாய் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் இது குறித்து மேலதிக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

நன்றி: அவுட்லுக்.