Actors BJP Intellectual Politicians West Bengal

மே.வங்கம்: குளித்து கொண்டிருந்தவருடன் போஸ் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

சமீபத்தில் அமித் ஷா முன்னிலையில் பாஜக வில் இணைந்த மே .வங்க சினிமா நடிகர் ஹிரான் சாட்டர்ஜிக்கு கரக்பூர் சதர் தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எந்த அளவிற்கு என்றல் குளித்து கொண்டிருக்கும் ஒருவருடனும் கூட நின்று போஸ் கொடுத்து, வாக்குகளை சேகரித்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆனதை தொடர்ந்து இவர் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்.

மார்ச் 27 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள மே.வங்க சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவால் களமிறக்கப்பட்ட முதல் டோலிவுட் நடிகர் ஹிரன் சாட்டர்ஜி ஆவார்.கடந்த ஒரு மாதத்தில் பாஜகவில் சேர்ந்த ருத்ரானில் கோஷ், ஸ்ரபந்தி சாட்டர்ஜி மற்றும் பேயல் சர்க்கார் போன்ற பல வங்காள நடிகர்களில் இவரும் ஒருவர்.