Jaggi

தண்ணீரை தொடாமலேயே சிந்தனையின் மூலமே நீரின் மூலக்கூறுகளில் (molecules) மாறுதல்கள் செய்ய முடியும் – ஜக்கி வாசுதேவ் !

தண்ணீரை தொடாமலேயே பார்வையால் பார்த்தோ அல்லது சிந்தனையின் மூலமே கூட நீரின் மூலக்கூறுகளில் (molecules) மாறுதல்கள் செய்ய முடியும் என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். அப்படித்தான் கோயில்களில் வழங்கும் தீர்த்தத்தில் அந்த மூர்த்தியின் சக்தி உட்புகுந்து, நம்மைப் பாதுகாக்கிறது என்கிறார். கிரகணம் நிகழும் பொழுது உணவு உட்கொண்டால் அது வயிற்றைக் கெடுக்கும் என்கிறார். அதற்கு ஆதாரமாக ருத்ராக்ஷத்தை வைத்து ஒரு ‘பரிசோதனை’ வேறு நடத்தி ‘நிரூபிக்கிறார்’. ‘தண்ணீர் என்பது ஒரு திரவக் கணினி,’ என்கிறார். Water is liquid computer.

இதையெல்லாம் மத நம்பிக்கைகளாக முன்வைக்கும் வரை நம் யாருக்கும் பிரச்சினை இருக்கத் தேவையில்லை. ஆனால் இவற்றை எல்லாமே ‘அறிவியல்’ என்று அழைக்கிறார். வழக்கமான வாட்சப் பதிவு போல, நம் முன்னோர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருந்தது என்கிறார். நவீன அறிவியலை நக்கல் அடிக்கிறார். ‘நம் பாட்டியிடம் இருந்து வந்தால் மூட நம்பிக்கை; மேற்கே இருந்து வந்தால் அறிவியல், அவ்வளவுதான்’ என்று தீர்ப்பு அளிக்கிறார். அதோடு நிறுத்தாமல் ஐன்ஸ்டைனை வம்புக்கு இழுக்கிறார். அது என்ன எல்லா மதகுருக்களுக்கும் ஐன்ஸ்டைன் மேல் காண்டு? அவர் பாவம் உங்களுக்கு என்ன சார் கெடுதல் பண்ணினார்?

இவர் சிஏஏ பற்றி உளறிய ஒரு வீடியோவை 2019ல் பார்த்த பின்னர் யூடியூப் தொடர்ந்து இவர் வீடியோக்களை பரிந்துரைத்தது. அப்போது ‘Not Interested’ ஆப்ஷன் போட்டு நிறுத்தி விட்டேன். எவ்வளவு பெரிய எண்டர்டெயின்மெண்ட்டை மிஸ் பண்ணி இருக்கிறேன் என்று வருத்தமாக இருக்கிறது. நித்யானந்தரே சற்றே ஒதுங்கி நில்லுங்கள். The new Master is here.!

ஆக்கம் – ஸ்ரீதர்
.
.