BJP Islamophobia Minority Muslims Uttar Pradesh

உபி: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் முஸ்லிம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து பொருட்களை நாசம் செய்த பாசிச கும்பல் !

உபி யில் மோடியின் தொகுதியான வாரணாசியில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பாசிச கும்பல் ஒன்று ஒரு முஸ்லீம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து, அவர்களின் வீட்டு பொருட்களையும், ஒரு சிறிய தொழிற்சாலையையும் அடித்து நொறுக்கி, அங்கு வசிக்கும் பெண்களையும் தாக்கி உள்ளனர். வீட்டில் இருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

காவல்துறையினர் குண்டர்களுடன் பக்கபலமாக இருந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் தாக்கி முஸ்லிம்கள் மீதே வழக்கு பதிவு செய்தனர் என சப்ரங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை மற்றும் சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.