Corona Virus Hindutva Uttar Pradesh Yogi Adityanath

உபி : கொரோனா பரவிவரும் வேளையில் லச்சக்கணக்கானோர் கூடும் ராமர் திருவிழாவுக்கு மாநில அரசு அனுமதி..?

இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ராம் நவாமி தினத்தன்று அயோத்தியில் ஒரு மெகா நிகழ்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ராம் நவமி மேளா/கண்காட்சி வருகிற மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது இதில் லச்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வை நிகழ்வை கைவிடுமாறு மருத்துவ ஆலோசகர்கள் மாநில அரசுக்கு அறிவுறுத்திய போதிலும் இந்த கண்காட்சியை நடத்த மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

பரிந்துரையை அலட்சியம் செய்யும் தலைமை பூசாரி ஆதித்யானத்தின் அரசு :

கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நிகழ்வை ரத்து செய்யுமாறு அயோத்தியின் தலைமை மருத்துவ அதிகாரி அரசிடம் கோரியிருந்தார். மேலும் “இத்தனை மக்களை திரையிட(சோதனை) தேவையான சாதனங்கள் எங்களிடம் இல்லை” என்று தலைமை மருத்துவ அதிகாரி கன்ஷ்யம் சிங் கூறியுள்ளதை மேற்கோளிட்டு டெக்கான் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தர் பல்டி:

ஆதித்தியநாத் அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, மாவட்ட அதிகாரிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். “COVID-19 மேலும் பரவுவதை” தடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யும் என்று அவர்கள் மக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

முஸ்லிம்கள் வசம் இருந்த பாபர் பள்ளிவாசல் இந்துத்துவா வினரிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நடைபெறும் முதல் விழா என்பதாலும் இந்துத்துவாவினரை அதிருப்தியில் ஆழ்த்தாமல் இருக்கவும் தான் மாநில பாஜக அரசு ராம் மேளாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

https://twitter.com/krupashanker/status/1240316593596502018

மாவட்ட அதிகாரிகள் அறிவுரை :

மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகக் கூறிக்கொள்ளும் அதே வேளையில், அயோத்தியில் உள்ள ஒரு அதிகாரி பக்தர்கள் முகமூடி அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க “பக்தர்கள் செய்ய கூடுமானவை மற்றும் செய்யக்கூடாதவை” பற்றியும் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

ரத்து செய்யும் திட்டமில்லை:

ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் உறுப்பினரான அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் அனுஜ்குமார் ஜாவும், உ.பி. அரசாங்கத்தின் முடிவையும் ஆதரித்தார். “ராம் மேளா எங்கள் பாரம்பரியத்தின் ஒரு பகுதி, நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம், ஆனால் ராம் நவாமி மேளாவை ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை. மாவட்ட நிர்வாகம் கடந்த ஒரு மாதமாக முன்னேற்பாடுகளை செய்து வருகிறது, ”என்று அவர் தி பிரிண்டிற்கு தெரிவித்தார்.

முதல் முறையாக ராமருக்கு சுதந்திரம்:

இதற்கிடையில், ஆதித்யநாத்தின் முடிவு இந்து சாமியார்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகளில் ஒரு பகுதியை மகிழ்வித்துள்ளது. “இது (மேளா) நிறுத்த முடியாது … இது லச்ச கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் … அதுவும் இந்த ஆண்டு இது மிகவும் முக்கியமானது … முதன்முறையாக ராம் பகவான் சுதந்திரமாக இருக்கிறார்” என்று அயோத்தியாவைச் சேர்ந்த மஹந்த் பரம்ஹான்ஸ் டெக்கான் ஹெரால்டிடம் தெரிவித்தார்.

“பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் வராது” என்பதை ராமர் உறுதி செய்வார் என்று அவர் மேலும் கூறினார், மேலும் பக்தர்களின் யாத்திரை பாதுகாப்பாக அமைய சிறப்பு யாகம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஆரத்தி:

பக்தர்களை ஈர்ப்பதற்காக இந்த நிகழ்வை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்ப தலைமை பூசாரி ஆதித்யானத்தின் மாநில அரசும் திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஆதித்யநாத் மார்ச் 25 ஆம் தேதி ராம் மேளா தொடங்கும் போது முதல் நபராக ஆரத்தி எடுத்து துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் குழு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) ஆகியவை இந்த ஆண்டு ராம் நவமிக்கு பெரிய கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுள்ளன. இந்த இந்துத்துவா பரிவாரங்களின் அழுத்தத்தால் தான் மாநில பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சுபமுகுர்த்த நாள், ஒத்திவைக்க முடியாது:

மார்ச் 25 ஆம் தேதி ‘புல்லட் ப்ரூஃப்’ கண்ணாடி கட்டமைப்பில் ராமர் சிலை ஒன்றை நிறுவ வி.எச்.பி திட்டமிட்டுள்ளது. நிகழ்வை ஒத்திவைப்பது குறித்த பேச்சிற்கே இடமில்லை என்று வி.எச்.பி தலைவர் அலோக் குமார் தி பிரிண்ட்டிடம் தெரிவித்தார். “பகவான் ராம் தற்காலிக கூடாரத்திலிருந்து சபுதரா (மேடை) க்கு மாற்றப்படுவது நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளது. “மார்ச் 24-25 தேதிகள் ‘ஷுப் முஹுராத்’ தினங்கள்” எனவே நிகழ்வை ஒத்திவைக்க முடியாது”என்று அவர் மேலும் கூறினார்.

28 ஆண்டுகளா கூடாரத்தில் இருக்கிறார் ராமர்:

“ராம பகவான் கடந்த 28 ஆண்டுகளாக ஒரு கூடாரத்தில் இருக்கிறார்… கோயில் கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பு, சுப் முஹுரத்தில், இந்த விழா நடைபெறும், ”என்று அவர் மேலும் கூறினார், ராமர் கோயில் தீர்ப்பு சாதகமாக வந்ததால் ஏப்ரல் 8 ஆம் தேதி அனுமன் ஜெயந்தி வரை கொண்டாட்டங்கள் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆதித்யானத்தின் இம்முடிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/AdvaitaKala/status/1240356088790126592

எனினும் தற்போது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளதால் இந்நிகழ்வு குறித்து 20ம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என உபி முதல்வர் அறிவித்துள்ளார்.