Uttar Pradesh Yogi Adityanath

உபி முதல்வர் : “போராட்டத்தின் போது போலீசார் ஒருவரை கூட சுடவில்லை, அவர்கேள அவர்களுக்குள் சுட்டு கொண்டனர்”

கடந்த 2019 டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு நபர் கூட பொலிஸ் தோட்டாக்களால் கொல்லப்படவில்லை, மேலும் இறந்தவர்கள் “கலவரக்காரர்களின் தோட்டாக்களால்” தான் கொல்லப்பட்டனர் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டங்களின் போது உபி போலீசார் சிறப்பாக செயல்பட்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

“அகர் கோய் மர்னே கே லியே ஆ ஹி ரஹா ஹை தோ வோ ஜிந்தா கஹான் சே ஹோ ஜாயேகா [ஒருவன் சாவதற்காகவே ன்னு வந்தா, அவன் எப்படி உயிரோடு இருந்து விடுவான்?]”

“உபாத்ரவி உபாத்ரவியோ கி கோலியோன் சே ஹாய் மரே ஹை [கலகக்காரர்கள் மற்ற கலகக்காரர்களின் துப்பாக்கி தோட்டாக்களால் தான் இறந்தனர்].

படிக்க: உபி : 7 மாத குழந்தைக்கு பால் வாங்க சென்ற அனஸை (21) சுட்டு கொன்ற போலீஸ்- அராஜக வெறியாட்டம்!

எனினும் கொல்லப்பட்ட 23 நபர்களின் குடும்பத்தார் உபி போலீசார் தான் சுட்டு கொன்றனர் என்று சாட்சி பகரும் நிலையில் மாநில முதல்வர் இவ்வாறு கூறியுள்ளது அம்மக்களை மேலும் கோபமூட்டி உள்ளது. மேலும் உபி பிஜ்னோரில் உள்ள மாவட்ட காவல்துறை, தற்காப்புக்காக நாங்கள் ஒருவரை கொன்றது (அதுவே பச்சை பொய்) உண்மை தான் என கூறி இருந்தும் கூட ஆதித்யநாத் இதையும் ஒப்புக்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.