Uttar Pradesh Yogi Adityanath

உபி : ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கட் தண்ணீர்:குடிக்க அலைமோதும் ஏழை மாணவர்கள்!

அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பால் பாக்கட்டுடன், ஒரு பக்கட் தண்ணீர் கலந்து 81 பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கொடூரம் பாஜக ஆட்சி செய்யும் உபியில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் சோன்பத்ரா மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு சத்தான உணவிற்காக அரசுப் பள்ளிகளில் அரசு சார்பாக உள்ள மதிய உணவு திட்டத்தையே சார்ந்து உள்ளனர் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ‘தண்ணீரில் கலந்துள்ள பால்’ கிடைக்கவும் மாணவர்கள் வரிசையில் பொறுமையாக நின்று பெற்று கொள்கின்றனர். இதில் கொடூரம் என்னவென்றால் இந்த வெள்ளை தண்ணீரும் கூட அரை டம்ளர் தான் கொடுக்கப்டுகிறது. முன்னதாக இதே போன்றே வேறொரு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ரொட்டிக்கு தொட்டு சாப்பிட உப்பு வழங்கப்ட்ட சம்பவமும் அமபலமானது. ஆனால் இதை வெளியிட்ட ஊடகவியலாளர் மீதே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி வழக்கு பதிந்தது யோகி ஆதித்யநாத் அரசாங்கம். இந்த மாநிலத்தில் தான் மாடுகளுக்கு கோட் செய்து தரப்படுகிறது. விரைவில் 2500 கோடி செலவில் அயோத்தியாவில் ராமர் சிலை அமைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Watch Video and courtesy : NDTV