CAA Maharashtra

உத்தவ் தாக்கரே சிஏஏ வுக்கு ஆதரவு; கூட்டணி விரிசல் ஏற்படுமா?

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதே சமயம் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் .

“சி.ஏ.ஏ நாட்டிலிருந்து யாரையும் அகற்றுவதற்கான சட்டம் அல்ல … குடியுரிமையை நிரூபிப்பது என்பது இந்துக்கள் முஸ்லிம்கள் என இரு சாராருக்கும் கடினமான ஒரு விஷயம் தான். நான் அதை (NRC) நடக்க விடமாட்டேன்” என்று தாக்கரே ‘சமனா’ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். கூறியுள்ளார்.

கூட்டணி பிளவு ஏற்படுமா ?

காங்கிரஸ் மற்றும் என்.சி.பி – குடியுரிமை திருத்த சட்டத்திற்கான தங்கள் எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்தை தாக்கரே ஆதரிப்பது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸின் கூட்டணி அரசாங்கத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என பலரும் கருத்து தெரிவித்தாலும் என்.ஆர்.சி யை உத்தவ் ஆதரிக்காததால், அதற்கான வாய்ப்பில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாமானாவுக்கு அளித்த பேட்டியின் குறுகிய வீடியோ கிளிப்பில் “சி.ஏ.ஏ நாட்டிலிருந்து யாரையும் அகற்றுவதற்கான சட்டம் அல்ல” என்று சேனா தலைவரும் சாமனா ஆசிரியருமான சஞ்சய் ரவுத் நடத்திய நேர்காணலின் டீஸர் வீடியோ கிளிப்பில் தாக்கரே பதில் அளிக்கிறார்.

sanjay raut  சஞ்சய் ரவுத்  மகாராஷ்டிரா
சஞ்சய் ரவுத்

மேலும் “குடியுரிமையை நிரூபிப்பது என்பது இந்துக்கள் முஸ்லிம்கள் என இரு சாராருக்கும் கடினமான ஒரு விஷயம் தான். நான் அதை நடக்க விடமாட்டேன்” என தாக்கரே கூறுவதையும் வீடியோ கிளிப்பில் காண முடிகிறது.

முதலில் ஆதரவு, பிருகு வாபஸ், மறுபடியும் ஆதரவா?

குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 2019 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட போது சிவசேனா அதை ஆதரித்தது. எனினும், சேனாவின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் தலைமை அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, சிவ சேனா கட்சி மாநிலங்களவையில் மசோதாவை ஆதரிக்கவில்லை.

ரவுத் உள்ளிட்ட சேனா எம்.பி.க்கள் மாநிலங்களவையில் மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னரே வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து நரேந்திர மோடி-அரசாங்கத்தை விமர்சித்து சாமானவில் ஆக்கம் வெளியிடப்பட்டது. மோடி அரசின் சட்டங்களால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் போராடி வருகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது,சாமானவில்.

sanjay raut uddhav thackeray மகாராஷ்டிரா

பாகிஸ்தானி பங்காளதேசி:

அந்த வீடியோவில், “சட்டவிரோத பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷ் குடியேறியவர்களை” அகற்றுவதற்கான உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளீர்களா? என்றும் சஞ்சய் ரவுத் தாக்கரேவிடம் கேட்கிறார். எனினும் அதற்கான பதில் வெளியிடப்படவில்லை.

இந்துத்துவா தரப்பை திருப்தி படுத்தும் விதத்தில் அதே சமயம் கூட்டணி கட்சிகளையும் திருப்தியுற செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் தாக்கரே உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மூன்று பகுதி நேர்காணலின் முதல் பகுதி திங்களன்று ‘சாமானா’ வில் வெளியிடப்படும்