Yogi Adityanath

அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !!

உபி முதல்வர் ஆதித்யநாத் முஸ்லிம் பெயர்களை போன்ற தொனியில் உள்ள நகரங்களின் பெயர்களை  மாற்றுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக உள்ளவர். அந்த விதத்தில் 2018ல் அலகாபாத் என்று இருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றினார். அதை ஒரு சாதனையாக சங்பரிவார கூட்டத்தினர் கொண்டாடினர்.

அதே சமயம் பெயர் மாற்றத்தால் நகர் எந்த விதத்தில் முன்னேறி விட்டது? இதனால் பயன் என்ன என்று பொது மக்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த பெயர் மாற்றம் செல்லுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நீதிமன்றம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரயில் நிலையங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள்  மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் அதை மாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். 

அலகாபாத் அதன் பெயரை 1575 இல் பெற்றது. முகலாயப் பேரரசர் அக்பர் அதை இல்லஹாபாஸ் என்று அழைத்தார் (கடவுளின் தங்குமிடம்). அதற்கு பிறகு அவரது பேரன் ஷாஜகான் “அலகாபாத்” என்று பெயர் மாற்றினார்.