Uttar Pradesh Yogi Adityanath

உபி : காற்று மாசுபாட்டை குறித்து இர்ஷாத் ட்வீட் – (NSA)’தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’கைது செய்துவிடுவேன்! – போலீஸ்!

தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பது விவசாய பயிர் கழிவுகளை எரிப்பது என்று அறியப்படுகிறது. நீதிமன்றமும் சமீபத்திய தீர்ப்பின் போது  இது குறித்து குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் உபி மாநில பரேலி பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளி இர்ஷாத் கான் என்ற முதலாம் ஆண்டு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவன் தனது வீட்டருகே உள்ள ஒருவர் விவசாய பயிர் கழிவுகளை (stubble burning) எரிப்பதாக தனது ட்விட்டர் கணக்கு மூலம் குற்றம் சாட்டினார்.

மாணவரை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் காவல் அதிகாரி சுரேந்திர சிங் அந்த மாணவனை அழைத்து மிகவும் கீழ்த்தரமாக பேசி உன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விடுவேன். உனக்கு என்ன தைரியம் இருந்தால் டிவ்ட்டரில் இப்படி பதிவு செய்வ.. ட்விட்டரில் பதிவு செய்யும் முன்னர் என்னிடம் அனுமதி வாங்கினீய? நீ ஸ்டேஷனுக்கு வா உனக்கு புரியவைக்கிறே என்று கூறி மிகவும் மோசமாக பேசியுள்ள போன் கால் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது .

போன் கால் முழுவதிலும் என்னை மன்னித்து விடுங்கள் என்று அந்த மாணவன் கூறியும் கேட்கவில்லை போலீசார் பிறகு  காவல் நிலையத்திற்கு சென்ற மாணவனை 90 நிமிடங்கள்  ஓரத்தில் காத்திருக்க செய்து அவரது  போனை பிடுங்கி ட்விட்டரில் அந்த மாணவன் ட்வீட் அனைத்தையும் அழித்து விட்டுள்ளனர் போலீசார்.

விவகாரம் வெளியே வர பின்னர் பயிர் கழிவுகளை எரித்தவர் மீதும் ஒரு வழக்கை போடுவோமே என்று போட்டுள்ளனர் போலீசார். மேலும் விளக்கம் என்ற பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது இது குறித்து விசாரணை நடத்தப்படும்  என்று  கூறி முடித்து கொண்டனர் போலீசார்.