Farm laws West Bengal

‘பாஜக வுக்கு ஓட்டு போடாதீங்க’ – விவசாயிகள் கூட்டமைப்பு சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வலியுறுத்தல் !

விவசாயிகள் மற்றும் மேற்கு வங்காள மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) வலியுறுத்தி உள்ளது.

தேர்தல் தோல்வி மூடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய பாஜக அரசை கட்டாயப்படுத்தும் என்று எஸ்.கே.எம். தெரிவித்துள்ளது.

“நாங்கள் எந்தவொரு கட்சியையும் ஆதரிக்கவில்லை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கூறவில்லை, ஆனால் பாஜகவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே வேண்டுகோள்” என்று எஸ்.கே.எம் தலைவர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாஜக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என மே. வங்க மாநில விவசாயிகளை வலியுறுத்தி எஸ்.கே.எம் ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் மேதா பட்கர், பாஜக ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு “நாட்டை விற்க” முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார், மக்கள் தங்கள் வாக்குரிமையை எச்சரிக்கை உணர்வோடு பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களை விடவும் தற்போதைய அரசாங்கம் மோசமாக செயல்படுவதாக மேதா குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிந்தார் மேதா.