CAA Political Figures Tamil Nadu

சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு, காரணம் என்ன ?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சீமான் மீது கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில், சனிக்கிழமை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சீமானின் பேச்சு இரு சமூகங்களிடையே வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிட்டதாகவும் அது அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டபட்டுள்ளது.

சீமான் மீது தேச துரோக வழக்கு மற்றும் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 ஏ (இரு பிரிவினருக்கிடையே விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல்) உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 22 ம் தேதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இஸ்லாமிய குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த சிஏஏ எதிர்ப்பு பேரணியில் சீமான் பங்கேற்ற போது மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.