Modi

‘பிரதமர் மோடி எனக்கு சிறந்த முறையில் கிச்சடி சமைக்க கற்றுக் கொடுத்தார்’ – பாஜக தலைவரின் மனைவி பேட்டி..

உள்ளூர் பாஜக தலைவர் தீபக் சர்மாவின் மனைவி சீமா ஷர்மா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 1997ஆம் ஆண்டு நவராத்திரியின் போது, நான் பிரதமர் மோடிக்கு கிச்சடி சமைத்து கொடுத்தேன், ஆனால் அது அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பின்னர் மோடி எனக்கு எப்படி கிச்சடி உணவு சமைக்க வேண்டும் என்று காட்டினார்.

சிம்லா: பிரதமர் நரேந்திர மோடியின் சிம்லா பயணத்தின் ஒரு நாள் கழித்து, உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர், 90களின் பிற்பகுதியில் கட்சியின் இமாச்சலப் பிரதேசப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தபோது, ​​சரியான ‘சாபு டானா கிச்சடி’ சமைக்க பிரதமர் மோடி தனக்கு கற்றுக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.

செவ்வாய்க்கிழமை தனது சிம்லா பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி, தீபக் சர்மா பற்றி முதல்வர் ஜெய் ராம் தாக்கூரிடம் கேட்டார். தாக்கூர் பின்னர் ரிட்ஜ் மைதானத்தில் நடந்த பேரணியில் உரையாற்றிய போது இதனை நினைவு கூர்ந்தார்.

தீபக் ஷர்மா இன்னும் ஜக்கு கோவிலுக்கு நடந்தே செல்கிறாரா என்று விசாரித்ததில் இருந்து, ஹிமாச்சல பிரதேசத்தின் சாதாரண பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடியும் என்றார் தாக்கூர்.

செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யை தொடர்பு கொண்டபோது, ​​சிம்லா முனிசிபல் கார்ப்பரேஷனின் நியமன கவுன்சிலரான ஷர்மா, பிரதமர் மோடி அவரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி விசாரித்ததை அறிந்ததும் அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றார்.

1997 ஆம் ஆண்டு இரண்டாவது நவராத்திரியின் போது நரேந்திர மோடி பீட்டர்ஹாஃப் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ​​மோடிக்கு வேண்டி தனது மனைவி சீமா ஷர்மாவை கிச்சடி சமைக்க அழைத்ததை திரு சர்மா நினைவு கூர்ந்தார்.

கிச்சடி அவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், பிரதமர் மோடி என்னிடம் பேச விரும்பினார், அவரது அழைப்பின் பேரில் அங்கு சென்ற என்னிடம் சரியான ‘சாபு டானா கிச்சடி’ எப்படி சமைக்க வேண்டும் என்று அப்போது கற்றுக் கொடுத்ததாக சீமா சர்மா தெரிவித்தார்.

அன்றிலிருந்து நான் எப்போது ‘சாபு டானா கிச்சடி’ சமைக்கிறேனோ, அப்போதெல்லாம் மோடி எனக்குக் கற்றுத் தந்தபடியே சமைப்பேன்” என்று கூறிய சீமா, தனது கணவரை நினைவு கூர்ந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.