Activists Amit Shah Fact Check Fake News

“அப்பட்டமாக பொய் சொன்ன அமித் ஷா” – ஆர்.டி.ஐ மூலம் அம்பலபடுத்திய ஆர்வலர், ஆவேசம்!

கடந்த அக்டோபரில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சி.என்.என் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் வழங்கினார். அப்போது பேசிய அமித் ஷா “மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன” என்று கூறினார்.

இதை சி.என்.என் நியூஸ் 18 அல்லது இன்னபிற கோதி மீடியாக்களோ ஒரு பொருட்டாக எடுத்த கொள்ள வில்லை, பேட்டி கண்ட நபரும் இதை எப்படி சொலிகிறீர்கள், இதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் கேட்கவில்லை. இந்நிலையில் பிரபல ஆர்.டி.ஐ ஆர்வலர் திரு.சாகேத் இது குறித்து ஆர்.டி.ஐ மனு ஒன்றை அனுப்பினார்.

உள்துறை அமைச்சரின் கருத்துகளுக்கு ஆதாரம் கோரி 4 அம்சங்களுடனான ஆர்டிஐ மனுவை தாக்கல் செய்தார்.

(1) மேற்கு வங்காளத்தில் அமித் ஷா குறிப்பிடும் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளின் பட்டியல்?

(2) இது குறித்து அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் விளக்கமளித்ததா?

(3) அமித் ஷாவின் கருத்துக்கள் அதிகாரபூர்வ தரவுகளின் அடிப்படையிலானதா ?

(4) அமித் ஷா குறிப்பிடும் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளின் பட்டியல் அம் மாநில அரசாங்கத்துடனோ, அல்லது மேற்கு வங்க போலீஸாருடனோ பகிரப்பட்டதா?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் பதில், இது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்பது தான்.

மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக இது அமைந்துள்ளதால், இது மாநில இலாகாவுக்கு உட்பட்டது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

“இது நான் கேட்ட 4 வது கேள்விக்கு பதிலளிக்கிறது: “இந்த வெடிகுண்டு தொழிற்சாலைகள் பற்றிய தகவல்கள் மேற்கு வங்க பொலிஸுடன் பகிரப்பட்டதா?.” என்பது தான் அது.

“அபப்டி எந்த தகவலையும் உள்துறை அமைச்சகம் பகிரவில்லை. ஏன்? ஏனெனில் அப்படி தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.” என்கிறார் சாகேத்

தேர்தல் ஆதாயங்களுக்காக மேற்கு வங்க மாநிலத்தை இழிவுபடுத்துவதற்கும் அவமதிப்பதற்கும் மட்டுமே.

மத்திய உள்துறை அமைச்சர், மாநிலத்தின் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் போலி செய்திகளை வெளிப்படையாக கூறியுள்ளது, அதிர்ச்சியளிக்கிறது. தேர்தல் ஆதாயங்களுக்காக, மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கத்தை இழிவுபடுத்தவுமே இவ்வாறு அமித் ஷா பேசி உள்ளார். இப்படி அப்பட்டமாக பொய் பேசும் உள்துறை அமைச்சரை எவ்வாறு நம்ப முடியும்? என சாகேத் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த தகவலை மத்திய அமைச்சகத்திடமிருந்து அதனை லேசாக பெற்று விடவில்லை சாகேத். அக்டோபர் முதல் இந்நாள் வரை இது குறித்து பதில் அளிக்காமல் இருந்தது மத்திய உள்துறை அமைச்சகம். இதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீலுக்கு (முறையீடு) கூட பதிலளிக்கப்படவில்லை.

ஒரு கட்டத்தில் ஒரு உள்துறை அதிகாரி என்னை அழைத்து, “இதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதன் பின்னர் லீகல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் சாகேத். இதற்கு பிறகே வேறு வழியின்றி சாகேதுக்கு பதில் கிடைத்துள்ளது.

எனினும் ஒட்டுமொத்த மீடியாவும் இது குறித்து கப் சுப்பாக உள்ளது. யாரும் செய்தி வெளியிடவில்லை. இதனையும் அவர் குறிபிட்டு கடுமையாக சாடியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய தொலைக்காட்சியில் பொய் சொல்லி உள்ளார். இதை பற்றி செய்தி வெளியிட* ஒற்றை * ஊடகத்திற்கு கூட முதுகெலும்பு இல்லை” என கடுமையாக சாடியுள்ளார் சாகேத்.

இதனை தொடர்ந்து சாகேத்தை டிஎம் சி எம்பி மஹுவா பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.