RSS Tamil Nadu

தன்னார்வலர்கள் உணவு விநியோகிக்க தடை; ஆனால் ஆர்.எஸ்.எஸ் க்கு மட்டும் விதி விலக்கா?

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை அறிவித்துள்ளது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. எனினும் இதற்கு முரணாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் சென்னை மாநகராட்சியுடன் இனைந்து உணவு விநியோகத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று தி இந்துவில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னார்வலர்கள், காட்சிகள் மற்றும் இயக்கத்தினர் ஊரடங்கு உத்தரவால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெள்ளத்தின் போது முன்னணியில் நின்று சேவையாற்றிய இஸ்லாமியர்கள் இம்முறையும் களமிறங்கினர். எனினும் இவர்கள் செய்யும் உதவிகளை பாசிச சிந்தனையாளர்கள் முஸ்லிம்கள் விநியோகிக்கும் உணவு மூலம் கொரோனா பரப்புகிறார்கள் என விஷத்தை கக்கினார்கள்.

இந்நிலையில் அமைப்புகள், கட்சியினர், தன்னார்வலர்கள் என அனைவர்க்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு விதி விலக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மட்டும் மாநகராட்சியுடன் இணைந்து விநியோகத்தில் ஈடுபடுவார்கள் என செய்தி வெளியாகியுள்ளது பலரது கண்டனத்தை பெற்று வருகிறது.

இதற்காக ஆர்.எஸ்.எஸ் 67 மையங்களை அமைத்துள்ளது, தற்போது 530 க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் உணவு, முகமூடிகள், சானிடிசர்கள், கையுறைகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை சமூகத்தின் கீழ்மட்ட மக்களுக்கு விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் அமைப்பு காவல்துறையினருக்கு முகமூடிகளையும் வழங்கி வருகிறது என ஆர்.எஸ்.எஸின் சென்னை சேவை ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்காக சில கார்ப்பரேட் தலைவர்களால் துவக்கப்பட்ட feedmychennai.org உடன் கூட்டு சேர்ந்து இந்த சேவையை வழங்கி வருவதாக சொக்கலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.