Hindutva Islamophobia Minority Muslims New India

இந்துத்துவாவினர் பிரச்சனை செய்ததால் பள்ளிவாசலின் ஒரு பகுதியை முஸ்லிம்களே இடித்த அவலம்!

புது டில்லி: புது டில்லியில் உள்ள உத்தம் நகரில், 1980 -களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட ராஸா  ஜமா பள்ளிவாசலும், சனாதன் கோயிலும் வெறும் 25 அடி இடைவெளியில் அருகருகே கட்டப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆனால் தற்போதைய பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் அரசியல் தலைவர்களால் இந்த அமைதியான பன்முகத்தன்மை மாறி குறிப்பிட்ட மதச்சார்பு நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் , 1980 களில் இருந்து வசித்து வந்த இருதரப்பு சமுதாயத்தினரும் பிரச்சனையில் தலையிட்டு சரிசெய்ய முயற்ச்சித்தனர். அங்குள்ள ஒரு முதியவர் கூறுகையில் ஆரம்பக்காலத்தில் இந்த கோயில் கட்ட ஒரு முஸ்லிம் குடும்பம் பெருவாரியாக உதவி செய்தது. நான் பள்ளிவாசல் கட்ட உதவி செய்த ஒரு ஹிந்து. ஆனால் இப்பொழுது எதற்காக சண்டையிடுகிறார்கள் என்று புரியவில்லை என்றார்.

மசூதியின் செயலாளர் முகமது மோட்டி பத்திரிக்கையாளர்களிடம் கூறும் போது,

2008 ஆம் ஆண்டில், கோயிலுடனான இடத் தகராறு தொடர்பாக மசூதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது மோட்டி நகர் நீதிமன்றம், கோவில் மற்றும் மசூதி இரண்டுமே அப்படியே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றார்.

ஆட்சி மாற்றம் மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தால் மீண்டும் வெடித்த பிரச்சனை:

மோட்டி கூறும்போது, பள்ளிவாசலில் நீண்ட நாளாக தொழுது கொண்டிருக்கும் ஒரு நபரின் தாய் இறந்து விட்டார். அவர் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் அவர் தாயிற்க்கு நன்மை சேர வேண்டி இஸ்லாமியர்கள் தொழுவதற்கு முன் அங்கசுத்தி செய்துகொள்ளும் இடத்தை புணரமைத்துக் கொடுக்க முன்வந்த்தார்.

இதனடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது கோயில் நிர்வாகம் பள்ளிவாசல் நீதிமன்ற தீர்ப்பை மீறுகிறது என்று காவல் துறையிடம் புகார் அளித்தது. கோயில் நிர்வாகம், புகாரில் பள்ளிவாசலின் புதிய கட்டுமானப்பணி முன்பு இருந்ததை விட அதிக இடத்தை ஆக்கிரமிப்பதாக குறிப்பிட்டிருந்தது.

மேலும் “புதிதாக கட்டப்பட்ட பகுதியில் உள்ள குழாய்களில் இருந்து மாடுகள் கூட தண்ணீரைக் குடிப்பதை காவல்துறையினரே பார்த்து எங்களிடம் கூறி உள்ளனர்.

எனவே கோவில் அதிகாரிகள் சில அங்குல பகுதிக்கு ஆட்சேபனை தெரிவிப்பதால், நாங்கள் அதை ஏன் அகற்றக்கூடாது என்று போலீசார் கேட்டனர்.எனவே, நாங்கள் ஒப்புக்கொண்டோம், அதைச் செய்து முடித்தோம், ”என்று மோட்டி கூறினார்.

ஆனால் பிரச்சினை அத்தோடு முடிவடையவில்லை.இந்த மாதத்தில், கோயில் அதிகாரிகள், மீண்டும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த கட்டத்தில், இப்பகுதி ஏற்கனவே குறைக்கப்பட்டு இருந்தது, அனைத்து வேலைகளும் முடிவடைந்திருந்தது, டைல்ஸ் கூட போடபட்டிருந்தது ,என்று மோட்டி கூறினார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு :

பள்ளிவாசலின் பரப்பளவு மெதுவாக அதிகரித்து வருவதாகவும், அது சாலையையும் அருகிலுள்ள பூங்காவையும் ஆக்கிரமித்து வருவதாக கோயில் அதிகாரிகள் குற்றம் சாட்டினர் .அவர்கள் (முஸ்லிம்கள்) இந்த நாட்டில் மெதுவாக தங்கள் ஆதிக்கத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்,என்று ஒரு உள்ளூரில் வசிக்கும் ஒரு இந்து கூறினார். முஸ்லீம் ஆண்கள் கோவிலில் இந்து பெண்களை துன்புறுத்தியதாகவும், கோயிலில் கற்களை வீசியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் எதையும் உள்ளூர் போலீசார் உறுதிப்படுத்தவில்லை. மேலும் தொழுகைக்கான அழைப்பும் மைக்கில் சொல்ல கூடாது என புதுசாக கிளப்பினர்.

இதில் மத்தியில் ஆளும் பாஜக-வை சேர்ந்த ஹரீஷ் ஹர்ஜாயி பள்ளிவாசலின் பகுதியை தகர்ப்பதற்க்கு மூல காரணமாக செயல்படுகிறார் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

மிரட்டல் விடுக்கும் பாஜக நபர்:

“இந்துக்கள் மிகவும் பொறுமையாக இருகின்றனர், இஸ்லாமியர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும்.மசூதி வளாகத்திற்குள் அவர்கள் விரும்பியதைச் செய்வதில் எங்களுக்கு ஒருபோதும் சிக்கல் இல்லை, ஆனால் அவர்கள் எங்களை வம்பிழுக்க முயன்றால், மோடியின் ஆட்சியின் கீழ் உள்ள இந்து சமூகம் எதிர்வினையாற்றும் ”என்று மார்ச் 21 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஹர்ஜாய் கூறினார்.

மார்ச் 21 அன்று, அந்த பகுதியில் வகுப்புவாத பதட்டங்கள் வெடிக்க தொடங்கின, மோட்டி  பகிர்ந்த வீடியோக்கள் மசூதிக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தைக் காண்பித்தன, அதில் முந்தைய நாள் இரவு “ஜெய் ஸ்ரீ ராம்” என்று ஹர்ஜாயின் ஆட்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்ததை காண முடிகிறது.

நாங்களே இடிக்க முடிவு செய்தோம்:

‘மசூதி கமிட்டி குழு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அவர்களே அந்த பிரச்சனைக்குறிய முழு பகுதியையும் இடிக்க ஒரு மனதாக முடிவு செய்தனர். இன்று இல்லையென்றால், அது நாளை ஒரு பிரச்சினையாக மாறக்கூடும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த மசூதியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, எந்தவொரு மோதலும் ஏற்படாதவாறு இந்த பகுதியை இடிக்க முடிவு செய்தோம், ”என்று மோட்டி கூறினார்.

அது இடிக்கப்பட்ட பின்னர், கோயிலில் இருந்து ஒருவர் “மசூதியின் மினாரை இடிக்கவேண்டும்” என்று சொன்னதாக மோட்டி கூறினார்.கட்டிடம் இடிக்கப்படும் போது ஒரு கூட்டம் வெளியே கூடிவந்து “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் கூறுகையில் கட்டிடத்தை இடித்தால் அந்த பகுதியில் அமைதி நிலவும் என்று நினைத்து, கனமான இதயத்தோடு நாங்களே அந்த பகுதியை இடித்தோம். ஆனால் அதன் பின்னரும் ஒருவர் மசூதியின் கல்லறைகளை உடைக்கவும், மைக்கை அகற்றவும் சொல்லத் தொடங்கினார், ஏனென்றால் தொழுகைக்கான அழைப்புதொந்தரவாக இருப்பதாக கூறினார்.இத்தகையவர்கள் கலகத்தை உருவாக்க விரும்புகிறார்கள்.

கோயிலுக்கு அருகிலுள்ள மற்றொரு நிலப்பரப்பு மசூதிக்கு சொந்தமானது, முஹர்ரத்தின் போது, ​​அங்கு ஆண்டுதோறும் தாஜியாக்கள் (ஊர்வலம்) நடத்தப்படுகின்றன.கோவில் நிர்வாகத்தை சேர்ந்த யாருக்கும் இதுவரை பிரச்சினை இல்லை, ”என்று அவர் கூறினார்.

போலீசில் புகார் செய்யுங்கள்:

மோட்டி மேலும் கூறுகையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ‘எந்த பிரச்சனையும் வராது பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ‘ என எங்களுக்கு உறுதியளித்தனர்.“ஆனால், இந்து பெண்களை துன்புறுத்துவதற்காக முஸ்லிம்கள் கோவிலின் மொட்டை மாடிக்குச் செல்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.அவர்களிடம் எனது கேள்வி என்னவென்றால், இது உண்மையாக இருந்தால், அவர்கள் ஏன் அந்த நபர்களை குறித்து  போலீசில் புகாரளிக்கக்கூடாது? ” என்றார்.

மார்ச் 23 அன்று விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய இந்து அமைப்புகள் ஒரு நிகழ்ச்சியை நடத்தவிருந்தன. அழைப்பிற்கான முகவரியில் மசூதியையும் குறிப்பிட்டிருந்தனர்.இது அசாதாரணமானது.“வழக்கமாக, கோவிலில் நிகழ்ச்சிகள் நடக்கும் போது, ​​கோயிலின் பெயர் மட்டுமே இங்கு பிரபலமாக இருப்பதால் அதுவே போதுமானது.ஆனால் இந்த முறை, அவர்கள் மசூதியை முகவரியில் குறிப்பிட்டுள்ளனர், இது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ” என்கிறார் மோட்டி.

அடுத்த நாள், துவார்காவில் ஏ.சி.பி (துணைப்பிரிவு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது, இவர்அதிகாரத்தின் கீழ் உத்தம் நகர் பகுதி வருகிறது.ஏ.சி.பி இரு தரப்பினர் இடையேயும் உரையாற்றினார், எந்தவொரு சர்ச்சையும் ஏற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார், மேலும் ஹோலிக்குப் பிறகு மசூதி மற்றும் கோயில் அதிகாரிகள் இருவரும் சட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார். மேலும் காவல் துறை எந்த சார்புமின்றி அமைதியை நிலைநிறுத்த உறுதியளித்தனர் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறினர்.

இருப்பினும் அங்கு எம்ப்ராய்டரி வேலை பார்க்கும் அவர் கூறுகையில், தான் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை பள்ளிவாசல் புணரமைப்புக்கு கொடுத்ததாகவும், அது வீணாகி, வகுப்புவாத மோதல்களை உண்டாக்கும் என தான் நினைக்கவில்லை என வருத்ததுடன் தெரிவித்தார்.