Islamophobia Muslims Rajasthan

ராஜஸ்தான்: முஸ்லிம் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர், உயிரிழந்த குழந்தை..

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு அவர் முஸ்லீம் என்ற காரணத்திற்காக அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்தப் பெண் குழந்தையை ஆம்புலன்சிற்குள் பிரசவித்தார், எனினும் குழந்தை பிறந்த உயிர் இழந்தது. மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு இருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள்.

அந்தப் பெண்ணின் கணவர் இர்பான் கான் கூறுகையில் “எனது மனைவி குழந்தையை பிரசவிக்க வேண்டிய நேரம் வந்தது . நாங்கள் சிக்ரியிலிருந்து மாவட்ட தலைமையகத்தில் உள்ள ஜனனா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டோம், ஆனால் இங்குள்ள மருத்துவர்கள் நாங்கள் முஸ்லிம் என்பதால் சிகிச்சை அளிக்க முடியாது, ஜெய்ப்பூருக்கு செல்ல வேண்டும் என்று கூறி எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர். நான் அவளை ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும்போது, அவள் குழந்தையை பிரசவித்தாள், ஆனால் குழந்தை இறந்தது. எனது குழந்தையின் மரணத்திற்கு நிர்வாகத்தை நான் பொறுப்பேற்கிறேன் ” என குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்ணின் மதம் காரணமாக சிகிச்சை அளிக்க மறுத்ததைக் கண்டித்துள்ள ராஜஸ்தானின் சுற்றுலா அமைச்சர் விஸ்வேந்திர சிங் இது ஒரு வெட்கக்கேடான செயல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/vishvendrabtp/status/1246352397489688577

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் பரத்பூரில் உள்ள ஜனானா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கு டாக்டர் மோனீத் வாலியா என்ற மருத்துவர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

“ஒரு பெண் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்காக வந்துள்ளார், எனினும் அவரை அனுமதிக்காமல் ஜெய்ப்பூருக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. பணியில் இவ்வாறு நடந்து கொண்டது தொடர்பாக விசாரிக்கபடும்” என பரத்பூரின் ஜனனா மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ரூபேந்திர ஜா கூறினார்.

இதற்கு அஸதுத்தீன் ஒவைஸியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் நடப்பதற்கு தப்லீக் ஜமாத்தினர் தான் கொரோனா பரப்பினர் என்ற ஊடகங்கள் வெளியிட்ட பொய்யான செய்திகளே காரணம் என்று விமர்சகர்கள்கருத்து தெரிவிவிக்கின்றனர்.