Minority Punjab Sikhs

பஞ்சாப்: ‘ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும்’

ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற நவீன ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும், ஏனெனில் “காலம் அப்படிதான் உள்ளது” என அகல் தக்த் ஜதேதார் கியானி ஹர்ப்ரீத் சிங், திங்கள்கிழமை, மே 23, கருத்து தெரிவித்தார். ஒரு பக்கம் அவரது கருத்து விமர்சிக்கப்ட்டாலும் மறுபுறம் நாட்டின் சிறுபான்மையினரின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதில் தவறில்லை என்று பல நிபுணர்களும் நியாயப்படுத்தினர்.

இன்றும் கூட, குறிப்பாக சீக்கிய சிறுவர்கள் மற்றும் பெண்கள், குரு ஹர்கோவிந்த் சிங்கின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அவர்கள் ‘கட்கா பாசி’ (ஒரு பாரம்பரிய தற்காப்பு கலை), வாள் சண்டை மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் பயிற்சி எடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு சீக்கியரும் ஒரு உரிமம் பெற்ற நவீன ஆயுதத்தை சட்டப்பூர்வமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும், ஏனெனில் நாம் வாழும் கால சூழ்நிலை அப்படி இருக்கிறது,” என ஹர்ப்ரீத் சிங் பேசியுள்ளார்.

குரு ஹர்கோவிந்த் சிங்கின் ‘குர்தா காடி திவாஸ்’ விழாவில் சிங் இவ்வாறு பேசியுள்ளார். 10 சீக்கிய குருக்களில் ஆறாவது குரு ஹர்கோவிந்த் சிங் ஆவார்.

அகல் தக்த்தின் தலைவராக இருப்பதால், சிங் பொதுவாக அனைத்து முக்கிய சீக்கிய மத நிகழ்வுகள் மற்றும் சிறுபான்மையினர், சமூகம் மற்றும் நாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.

“சீக்கியர்கள் குர்பானி கற்க வேண்டும், மத வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் போதைப்பொருளிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் இவை நமது வீடுகள், மனசாட்சி மற்றும் ஞானத்தை அழித்துவிட்டன. போதைப்பொருளில் இருந்து விலகி இருக்க ஒரே வழி, ‘பானா’ அல்லது ஆடை மற்றும் ஐந்து ‘கே’ சீக்கியத்தின் தனித்துவமான அடையாளத்தைப் பின்பற்றுவதுதான். இது குரு ஹர்கோவிந்த் சிங்கின் போதனை என அகல் தக்த் தலைவர் மேலும் கூறினார்.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், ஜூன் 1984 இல் பொற்கோயில் மீதான தாக்குதலையும் மேற்கோள் காட்டி சிங் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும் நாட்டில் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சி-ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கும் (பிஜேபி-ஆர்எஸ்எஸ்) மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை அவர் விமர்சித்தார். 2019 ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியாவை ‘இந்து ராஷ்டிரா’ என்று கூறியதைத் தொடர்ந்து, சிங் ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யக் கோரினார்.

மெல்லிய இந்துத்துவாவை கடைபிடிக்கும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ‘சீக்கியர்களை உரிமம் பெற்ற நவீன ஆயுதங்களை வைத்திருக்கச் சொல்வதை விட சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய செய்தியைப் பரப்புமாறு அவரை வலியுறுத்தினார் பரப்புமாறு ஹர்ப்ரீத் சிங்கை வலியுறுத்தினார்.

நிபுணர்கள் என்ன சொன்னார்கள்?

ஜலந்தரைச் சேர்ந்த பிபிசி பத்திரிகையாளர் பால் சிங் நௌலி, சிங்கின் வீடியோவைப் பார்த்த பிறகு, நாட்டின் தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து அவர் தனது கருத்தை வெளியிட்டதாகத் தெரிகிறது.

“சிறுபான்மையினருக்கு இந்தியா படிப்படியாக ஆபத்தான நாடாக மாறியுள்ளது. முஸ்லிம்களின் நிலையைப் பாருங்கள். பிஜேபி-ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு கதையை உருவாக்கி, பின்னர் மீண்டும் மீண்டும் மிரட்டி, பகிரங்கமாக அவர்களை தாக்கி அதை விளம்பரபடுத்துகின்றனர்.. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கியானி ஹர்ப்ரீத் சிங், இந்த விவகாரங்கள் அனைத்தையும் ஆழமாகச் சிந்தித்த பிறகே இந்த அறிக்கையை வெளியிட்டதாகத் தெரிகிறது. நரேந்திர மோடி அரசாங்கம் சீக்கியர்களை கவர்ந்திழுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், நாட்டில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

“ஜியானி ஹர்ப்ரீத்தின் கூற்று, [ஜர்னைல் சிங்] பிந்த்ராவாலே, சீக்கிய இளைஞர்களிடம் தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருக்கச் சொன்னதைப் போன்றது. இருப்பினும், ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், அந்த நேரத்தில், பஞ்சாப் தீவிரவாதத்தின் பிடியில் இருந்தது. மேலும், சீக்கிய மதத்தின்படி, ‘அமிர்ததரி சீக்கியர்கள்’ (முழுக்காட்டுதல் பெற்ற சீக்கியர்கள்) தற்காப்புக்காகவும் பலவீனர்களைப் பாதுகாப்பதற்காகவும் ஆயுதங்களை வைத்திருப்பது வழக்கம். அதில் தவறேதும் இல்லை” என்றார் பால் சிங் நௌலி.