Bangladesh Modi

மோடியின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷில் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பங்களாதேஷ் போலீசார் வியாழக்கிழமை ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

தலைநகர் டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்ற போது, பலரும் கற்களை அதிகாரிகள் மீது வீசியதில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மட்டுமே 2000 பேர் இணைந்ததாக போராட்டகாரர்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மோடி மத பதட்டங்களைத் தூண்டுவதாகவும், 2002 ல் இந்திய மாநிலமான குஜராத்தில் முஸ்லீம் விரோத வன்முறையைத் தூண்டியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர், குஜராத் கலவரத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பான்மை முஸ்லிம்களே. இந்த பயங்கர மதக் கலவரத்தின் போது மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியின் உருவபொம்மையையும் எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

“சுமார் 40 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர். பொலிஸ் லத்திசார்ஜ் மற்றும் ரப்பர் தோட்டாக்கள் காயங்களுடன் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ”என்று போராட்டத்தை ஏற்பாடு செய்த மாணவர் உரிமைகள் பேரவையின் மூத்த நிர்வாகி பின் யாமின் மொல்லா ஏ.எஃப்.பி ஊடகத்திடம் தெரிவித்தார்.

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பங்களாதேஷ் இஸ்லாமி சத்ராஷிபிர் மாணவ அமைப்பு

மோடி தனது வருகையின் போது, தெற்கு கிராமப்புற மாவட்டங்களில் உள்ள இரண்டு கோயில்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.