Babri Masjid Hindutva Minority Muslims Uttar Pradesh

உபி: பாபர் பள்ளிவாசலுக்கு பிறகு மீண்டும் ஒரு பள்ளிவாசல் இடிப்பு; நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பள்ளிவாசல் இடிப்பு !!

மாநில உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உத்தரபிரதேசத்தின் உள்ளூராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல் ஒன்றை இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ள சம்பவம் நாட்டில் எந்த பரபரப்பையும் ஏற்ப்படுத்த வில்லை. 1992 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் இடிக்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் நிகழ்வுக்கு பிறகு இது போன்ற ஒரு நிகழ்வை பாஜக மாநில அரசே முன்னின்று சட்டவிரோதமாக தற்போது அரங்கேற்றி உள்ளது. இது குறித்து நாம் செய்தி வெளியிடும் இந்த கணம் வரை இந்தியாவில் உள்ள ஒரு ஊடகமும் கூட செய்தி வெளியிடவில்லை. தி கார்டியன் என்ற சர்வதேச ஊடகமே இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ராம் சனேஹி காட் நகரில் உள்ள இந்த மசூதி (அயோத்தியாவை ஒட்டியுள்ள மாவட்டத்தில் உள்ளது) பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்திலிருந்து குறைந்தது ஆறு தசாப்தங்களாக இருந்து வரும் பழமையான ஒரு பள்ளிவாசல். இதற்கான ஆவணங்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் வைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக பள்ளிவாசல் இடிப்பு:

திங்களன்று, பள்ளிவாசல் சுற்றியுள்ள மக்களை அங்கிருந்து அகற்றினர் போலீசார், பின்னர் புல்டோசர்களைக் கொண்டு வந்து மசூதி இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பள்ளிவாசலின் சிதிலங்கள் ஆற்றில் வீசப்பட்டன. மசூதி இருந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்குள் யாரும் வருவதைத் தடுக்க போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பழமையான பள்ளிவாசல்:

பள்ளிவாசல் குழுவில் உள்ள உள்ளூர் இமாம், மவுலானா அப்துல் முஸ்தபா கூறுகையில், இம்மசூதி “நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது” என்றும், “ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் [தொழுகையை] நிறைவேற்ற இங்கு வருகிறார்கள்” என்றும் கூறினார்.

ஜனநாயகமா? தீவிரவாதமா?:

“அனைத்து முஸ்லிம்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர், எனவே மசூதி இடிக்கப்படும்போது யாரும் மசூதிக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை, எதிர்ப்பு தெரிவிக்கக் கூட துணியவில்லை. இன்றும் கூட, பல மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மற்ற பகுதிகளில் பதுங்கி இருக்கிறார்கள், என்றார் பள்ளிவாசல் இமாம்.

திமிர் பதில்?:

“..எனக்கு எந்த மசூதியும் தெரியாது. ஒரு சட்டவிரோதமான கட்டிடம் ஒன்று இங்கு இருந்தது என்று மட்டுமே எனக்குத் தெரியும். உத்தரபிரதேச உயர் நீதிமன்றம் இதை சட்டவிரோதமானது என்று அறிவித்தது. அதனால்தான் பிராந்திய மூத்த மாவட்ட நீதவான் நடவடிக்கை எடுத்தார். இதற்கு நான் வேறு எதுவும் சொல்ல மாட்டேன். ” என மாவட்ட மாஜிஸ்திரேட் ஆதர்ஷ் சிங் கூறினார்.

சட்டவிரோத இடிப்பு:

ஏப்ரல் 24 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவை மீறி இப்பள்ளிவாசல் பிடிக்கப்பட்டுள்ளது. மே 31 ம் தேதி வரை எவரும் அங்கிருந்து வெளியேற்றப்படவோ, மசூதியை இடிக்கவோ கூடாது, மசூதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஏப்ரல் 24 ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

மார்ச் 15 அன்று மாநில அரசின் கீழ் செயல்படும் பாராபங்கி உள்ளூர் நிர்வாகத்தின் சார்பில் மசூதி கமிட்டிக்கு “ஷோகாஸ்” நோட்டீஸ் அனுப்பபட்டது, (மசூதியின்) கட்டிடத்தின் இருப்பிடம் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பதை விளக்கி, அதை இடிக்கும் நோக்கத்தை மேற்கோள் காட்டபட்டிருந்த அந்த நோட்டீஸில் அது ஒரு சட்டவிரோதமான கட்டிடம் என்றும்குறிப்பிடப்பட்டிருந்து.

ஆதாரங்களுடன் பதில் அளித்த பள்ளிவாசல் நிர்வாகம்:

1959 முதல் பள்ளிவாசல் கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் உட்பட ஒரு விரிவான பதிலை பள்ளிவாசல் நிர்வாகம் அனுப்பியது, ஆனால் உள்ளூர் நிர்வாகம் இந்த பதிலை உத்தியோகபூர்வ பதிவுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

https://twitter.com/AdnanS_01/status/1394353861725458434
உயர்நீதிமன்றத்தை நாடிய பள்ளிவாசல் நிர்வாகம்;

பள்ளிவாசலை இடித்து விடுவார்கள் என அஞ்சிய மசூதியின் நிர்வாகத்தினர், இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். தொடுத்தனர். இதனை தொடர்ந்து எதை வைத்து பள்ளிவாசல் சட்டவிரோத கட்டிடம் என சொல்கிறீர்கள் என்றும் (சாலையின் நடுவில் இல்லாமல் இருந்தும்) மசூதி எப்படி போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுத்துகிறது என்றும் உள்ளூர் நிர்வாகம் பதில் அளிக்கச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பு இவ்வாறு இருப்பினும், அடுத்த சில நாட்களில், உள்ளூர் நிர்வாகம் மசூதிக்கு செல்லக்கூடிய பாதையை தடுக்க ஒரு நிரந்தர கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கியது.

அரச பயங்கரவாதமா?:

மார்ச் 19 அன்று, உள்ளூர் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிக்குள் நுழைவதைத் தடுத்தனர், இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 35 க்கும் மேற்பட்ட உள்ளூர் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், இன்று வரை இந்த வழக்கில் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது,

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத விதத்தில் பள்ளிவாசலும் இடிக்கப்பட்டது. மசூதி குழுவின் உறுப்பினர்கள் உட்பட அப்பகுதியில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள், அவர்கள் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.