Mamata Banerjee Modi West Bengal

‘மோடி ஒரு கலவரகாரர்,ட்ரம்பை விட மோசமான நிலையை அடைவார்’ – மம்தா பானர்ஜி விலாசல்!

பிரதமர் நரேந்திர மோடியை “மிகப்பெரிய கலவரகாரர்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட “இன்னும் மோசமான” விதியை மோடி சந்திப்பார் எனவும் மம்தா தெரிவித்தார்.

ஹூக்லி மாவட்டத்தின், சஹகஞ்சில் நடந்த பேரணியில் பேசிய பானர்ஜி, மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள் என்று கூறினார்.

அவர் டி.எம்.சியை ஒரு ‘தோலாபாஜ்’ (மிரட்டி பணம் பறிக்கும்) கட்சி என்று வர்ணிக்கிறார், ஆனால் அவர் யார? நரேந்திர மோடி ஒரு மிகப்பெரிய ‘தங்கேபாஸ்’ (கலவரகாரர்/கலகக்காரர்), மிகப்பெரிய ‘தண்டாபாஸ்’ (சந்தர்ப்பவாதி).

திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக ‘கட் மனி’ (கமிஷன் கலாச்சார) குற்றச்சாட்டை பாஜகவினர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர், இதற்கு பதில் அளிக்கும் வகையில் “நீங்கள் முழு நாட்டையுமே பல கோடிகளுக்கு விற்று வருகிறீர்கள், அது என்ன? (கேட் மனியா) பூனை பணமா அல்லது எலி (மனியா) பணமா ? “என்று பானர்ஜி கூறினார்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை டி.எம்.சி க்கு உள்ளதாக அவர் கூறினார்.

“இந்த சட்டமன்றத் தேர்தலை (‘கெலா ஹோப்’) ஒரு விளையாட்டு களமாக சித்தரித்து … நான் கோல்கீப்பராக இருப்பேன், நீங்கள் (பிஜேபி) ஒரு கோல் கூட அடிக்க முடியாது. அனைத்து ஷாட்களும் கோல் போஸ்டுக்கு மேலே பறக்கும்,” என அம்மாநிலத்தின் மிகவும் பிரபலமான விளையாட்டான கால்பந்துக்கான உதாரணத்துடன் விளக்கினார் பானர்ஜி.

பாஜக கடைப்பிடிக்கும் வன்முறை கொள்கையால் எதையும் பெற முடியாது என்றார்.

அவர் (மோடி) டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . ட்ரம்ப்புக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நரேந்திர மோடி இன்னும் மோசமான விதியை சந்திப்பார்” என்று மம்தா மேலும் கூறினார்.

2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப், ஜோ பிடனிடம் தோற்றார்.

பாஜக கட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் அவர்கள் கட்டாய மவுனத்தில் வைக்கப்படுகின்றனர் என்று கூறினார்.

“பாஜகவில் பல பெண்கள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் உள்ளனர். எங்கள் கட்சியில், பெண்களுக்கு நாங்கள் சரியான மரியாதை தருகிறோம்,” என்று அவர் கூறினார்.

நிலக்கரி மோசடி தொடர்பாக டி.எம்.சி பாராளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜியின் மனைவியை அண்மையில் சிபிஐ விசாரித்ததை குறித்து பானர்ஜி கண்டித்து பேசினார்.