Indian Economy Modi

‘பெட்ரோல், டீசல் விலை உயர காரணம் முந்தைய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே’ – பிரதமர் மோடி ..

இந்தியாவில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி இருக்கும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி சார்புநிலையை குறைப்பதில் முந்தைய அரசாங்கங்கள் கவனம் செலுத்தியிருந்தால் இன்று நடுத்தர மக்கள் சிரம படும் நிலை உண்டாகி இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியா தனது எண்ணெய் தேவைக்காக 85%, எரிவாயு தேவைக்காக 53% க்கும் அதிகமாக இறக்குமதி செய்தது என மோடி குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக எரிபொருள் விகிதங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து, ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலை உயர்வை விமர்சித்துள்ளன, சர்வதேச எண்ணெய் விகிதங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் / மே மாதங்களில் இரண்டு தசாப்தங்களாக குறைந்து வருவதால் ஏற்பட்ட நன்மைகளை மக்களுக்கு கிடைக்கவிடாமல் மோடி அரசு வரிகளை உயர்த்தியது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

“2014 ஆம் ஆண்டு முதல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை முழுவதும் பல்வேறு சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், ஆய்வு மற்றும் உற்பத்தி, இயற்கை எரிவாயு சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை செய்துள்ளோம். பல்நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டை ஈர்க்கும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், ”என்று மோடி மேலும் கூறினார்.