BJP Manipur

மணிப்பூர் பாஜக முதல்வருக்காக தலையை தரையில் வைத்து மண்டியிட்ட மாணவர்கள்; நெட்டிசன்கள் கண்டனம் !

மணிப்பூரில் நிலவும் போதை பழக்கங்கள் மற்றும் போதை வஸ்த்து வளர்ப்பதற்கு எதிரான போர்ப்பிரகடனத்தை தொடங்கி வைத்து பேசுவதற்காக ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார் அம்மாநில பாஜக முதல்வர் பைரன் சிங். இந்நிகழ்ச்சியின் போது சிறுவர் சிறுமிகள் பலர் அவர் நடந்து வரும் சிவப்பு கம்பளத்தின் இருமருகிலும் நின்று வாழ்த்து தெரிவிக்க நிறுத்தப்பட்டிருந்தனர்.

அவர் நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த சிறுவர் சிறுமிகள் அவர் வந்தவுடன் தரையில் முட்டிபோட்டு, அடிமைகளை போல தலையை மண்ணில் கவிழ்த்தி வணக்கம் செய்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியான சிறிது நேரத்தில் இணையதளவாசிகள் கோபத்தில் தங்களது கண்டனப்பதிவுகளை எழுதி தீர்க்க ஆரம்பித்தனர்.

முதல்வரே உங்களுக்கு இப்படியான மரியாதை வேண்டுமாயின் தாய்லாந்து நாட்டிற்கு போகவும் என்றும், சுத்தமில்லாத பாதையில் குழந்தைகளை இப்படி சுகாதாரமின்றி தரையில் மண்டியிட்டு தலை கவிழச்செய்தது அடிமைப்படுத்தலின் உச்சம் என்றும், இப்படி தலைவணக்கம் செய்யும் மணிப்பூரின் மீத்தேய் பழங்குடிகளின் திரும்ப நினைத்தால் நாங்களும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் எனவும் கமெண்ட்கள் வர தொடங்கின.

அரபுலக அரசர்களும், இங்கிலாந்து ராணியும் கூட செய்ய விரும்பாத இவ்விழி செயலை செய்ய பாஜகவினர் மட்டுமே கையாள்கின்றனர் எனவும் மக்கள் ஜனநாயகத்தில் வாழ்கிறோம் என்கிற அச்சம் ஒருசிறிதும் இன்றி இவ்வாறு வளரும் குழந்தைகளை கொடுமைப்படுத்தியது மணிப்பூர் வரலாற்றில் அழிக்க முடியாது கறையாக படிந்துவிட்டது என நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.