BJP Corona Virus Madhya Pradesh

மத்தியப் பிரதேசம்: அமைச்சரவை இல்லாத நீண்ட கால ஆட்சி என்ற சாதனை படைத்த பாஜக முதல்வர்; குவியும் கண்டனங்கள்.

அமைச்சரவை இல்லாமல் நீண்ட காலம் பணியாற்றிய நாட்டின் முதல் முதலமைச்சர் என்ற நிலையை அடைந்துள்ளார் பாஜக வின் சிவராஜ் சிங் சவுகான்.

கர்நாடகாவில், முதல்வராக பதவியேற்ற 24 நாட்களுக்கு பிறகே யெடியூரப்பா அமைச்சரவை அமைத்தார்.

தற்போது அந்த சாதனையை சிவராஜ் சிங் சவுகான் முறியடித்துள்ளார். இன்றோடு, அமைச்சரவை இல்லாமலேயே 26 நாட்கள் முதல்வராக பணியாற்றி உள்ளார், சிவராஜ்.

மாபெரும் சாதனை:

அமைச்சர்கள் குழு இல்லாமல் முதலமைச்சராக நீண்ட காலம் பணியாற்றிய சாதனைக்காக சவுகானை வாழ்த்தியுள்ளார் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் டங்கா.

எனினும் டெல்லியின் மேலிடத்து உத்தரவின்றி அமைச்சரவையை உருவாக்க முடியாத நிலையில் உள்ளார் முதல்வர்.

நாடே கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரேதசத்தில் சுகாதாரத்துறை அமைச்சரே இல்லாமல் இருப்பதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றது.

யார் அமைச்சர் ஆவார்கள் ?

கோபால் பார்கவா, நரோட்டம் மிஸ்ரா, பூபேந்திர சிங், யசோதரா ராஜே சிந்தியா, விஜய் ஷா, அஜய் பிஷ்னோய், விஷ்வாஷ் சரங், அரவிந்த், கவுரிஷங்கர் பிசன், ராஜேந்திர சுக்லா ஆகியோர் அமைச்சர்களாக்க படலாம் என தெரிகிறது.

அவர்களைத் தவிர, பிஜேஹுலால் சிங், துளசிராம் சில்வத், கோவிந்த் ராஜ்புத், இமார்டி தேவி, பிரபுரம் சவுத்ரி, ஹர்தீப் சிங் டாங் மற்றும் ராஜ்யவர்தன் சிங் தத்திகான் போன்ற பாஜகவுக்கு கட்சி தாவிய முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் நிலை உள்ளது.