Islamophobia Madhya Pradesh Muslims

பள்ளிவாசலில் பாங்கு சொல்லக்கூடாது என முஸ்லிம்களை தாக்கி, பள்ளியை பூட்டிய பாசிஸ்டுகள்; துணைபோன போலீசார்,தாசில்தார்!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாத ஒரே மாநிலம் பாஜக ஆளும் மத்திய பிரதேசமாக இருந்தது. ஒரு வழியாக கடந்த 22 ஆம் தேதியன்று தான் சுகாதாரத்துறை அமைச்சரயே நியமித்தது ஷிவ்ராஜ் சிங் அரசு. மக்கள் எல்லாம் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்று அஞ்சி வரும் சமயம், அத்தோடு சேர்த்து மதவெறி, மத வெறுப்பு எனும் வைரசையும் பாசிஸ்டுகள் பரப்பி வருவதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மீதான பொய் வழக்குகள், கைதுகள், தாக்குதல்கள், பள்ளிவாசல் தாக்கப்படுவது என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், கன்த்வா மாவட்டத்தை சேர்ந்த போரிசராயி கிராமத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான மதவெறுப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

போரிசாயி கிராமத்தில் உள்ள நவாஜ் பள்ளிவாசலில் தொழுகைக்கான பாங்கு அழைக்கப்பட்டு மத்திய அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் வெறும் மூன்று பேர் மட்டும் தொழ தயாரான சமயத்தில் ஒரு பாசிச மத வெறி பிடித்த கும்பல் பள்ளிவாசலுக்கு வந்து அங்குள்ள அப்பாவி முஸ்லிம்களிடம் கடுமையான நாக்கூசும் வார்த்தைகளை பேசி, அவர்களது தாய் தந்தை குறித்து எல்லாம் அசிங்கமாக பேசி மக்கா மதீனாவே பூட்டப்பட்டுள்ளது என்ற பொய்யான தகவலையும் கூறி அறிவற்ற காட்டுமிராண்டி போன்று ரவுடி தனத்தில் ஈடுபட்டனர்.

அட்டூழிய வன்முறையில் ஈடுபட்ட பாசிச கும்பல்:

இந்த சம்பவத்தின் போது மிகவும் கடுமையாக, கீழ்த்தரமாக நடந்து கொண்டது வயது முதிர்ந்த ஒருவரே, உடன் கும்பல் துணைக்கு உள்ளது என்ற தைரியத்தில் , ஒரு கட்டத்தில் பள்ளிவாசலினுள் இருந்த முஸ்லிம்களை வெளியே இழுத்து தாக்க துவங்குகிறான் அந்த கிழவன்.

எனினும் முஸ்லிம்கள் எந்த வித எதிர்வினையிலும் ஈடுபடவில்லை, பள்ளியில் பாங்கு கொடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது, அதன் அடிப்படையில் தான் செயப்படுகிறோம் என எத்தனை சொல்லியும் பாசிஸ்டு கும்பல் கேட்காமல் அராஜக அட்டூழிய வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளிவாசலை பூட்டவும் , பாங்கு சொல்லக்கூடாது எனவும் ரவுடித்தனம் செய்து பள்ளியை பூட்ட செய்துள்ளனர்.

குற்றவாளிகளாடு கைகோர்த்த போலீசார்:

சம்பவம் நடைபெற்றது குறித்து போலீஸாரிடமும், ஹர்சுத் தாசில்தாரிடமும் முஸ்லிம்கள் கொண்டு சென்றனர், எனினும் பாஜக ஆளும் மாநிலம் என்பதை நிரூபிக்கும் வகையில் பாசிச கும்பலுக்கு ஆதரவாக செய்யப்படும் விதத்தில் அவர்கள் எவர் மீதும் வழக்கை பதிவு செய்யவில்லை போலீசார், அதுமட்டுமின்றி தாசில்தாரும், போலீசாரும் இணைந்து நவாஜ் பள்ளிவாசலை பூட்டியுள்ளனர் என கீழுள்ள கடிதத்தில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

Image
சப் டிவிஷினல் அதிகாரிக்கு அனுப்பட்டுள்ள கடிதம்:

சப் டிவிஷினல் அதிகாரிக்கு கடிதம்:

இது குறித்து சப் டிவிஷினல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், ரம்ஜான் மாதமாக இருந்தும் பள்ளிவாசலுக்கு செல்லாமல் வீட்டிலேயே வழிபாடு நடத்தி வரும் முஸ்லிம்களிடம், இவ்வாறு போலீசார் நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=O4lzIJGLQdU&feature=youtu.be

போரிசராயி கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஏழைகள், குற்றவாளிகளை கைது செய்யாமல், முஸ்லிம்களிடம் உங்கள் பள்ளிவாசலில் சிசிடிவி யை பொறுத்துமாறு போலீசார் கூறி அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு நாங்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாத இக்கட்டான சூழலில் இருந்து வருகிறோம், நாங்கள் எப்படி சிசிடிவி பொருத்துவது என சப் டிவிஷினல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பள்ளிவாசல் இமாம் முஹம்மத் அஜீம் காதிரி, ரஃபி உள்ளிட்டோர் குறிப்பிட்டுள்ளனர்.