BJP Coimbatore

கோவையில் வானதி சீனிவாசன் போட்டியிட தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

கோயம்புத்தூர்: உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வரவேற்பதற்கான ஊர்வலமாக சென்ற பாஜக மற்றும் இந்து முன்னணியினர், கடை ஷட்டர்களைக் கீழே இறக்குமாறு கூறிக் கொண்டே மோட்டார் சைக்கிள்களில் பயணித்தனர். ஒரு கட்டத்தில் வன்முறையில் இறங்கி கடைகளின் மீது கற்களை வீசி தாக்கினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர், மேலும் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்தனர்.

பாஜக மற்றும் இந்து முன்னணியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை நடத்த அனுமதி எடுக்கவில்லை என்றும், இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் எஸ்.டி.பி.ஐ. மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பிரதிநிதிகள், குற்றம் சாட்டினார்.

புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நாங்கள் தொடர்ந்து செயல்பட உதவிடுங்கள்