Kashmir Muslims

சிங்கப்பூர்: காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தடை !

சிங்கப்பூர்: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து இந்துக்கள் மட்டுமே கொல்லப்பட்டதை போல பொய்யான சித்தரிப்புடன் எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தி மொழித் திரைப்படமான தி காஷ்மீர் பைல்ஸ் சிங்கப்பூரின் திரைப்பட வகைப்பாடு வழிகாட்டுதல்களுக்கு “அப்பாற்பட்டதாக” இருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வெளியான இத்திரைப்படம் , 1989 முதல் 1990 வரையிலான வன்முறைக் காலத்தில் தனது காஷ்மீரி இந்து பெற்றோர் கொல்லப்பட்டதை அறிந்த ஒரு பல்கலைக்கழக மாணவரின் கற்பனைக் கதையைச் சொல்கிறது.

காஷ்மீரில் தற்போது வரை சச்சரவு நீடித்து வரும் நிலையில் முஸ்லிம்களை சீண்டும் விதத்திலும், இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு முஸ்லிம்கள் பாதிக்கபடாதவர்களாக, ஒருதலைப்பட்சமாக சித்தரிக்கபட்டுள்ளதால் இந்த திரைப்படம் திரையிடுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது” என சிங்கப்பூர் அதிகாரிகள் சேனல் நியூஸ் ஏஷியா என்ற ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதிநிதித்துவங்கள் பல்வேறு சமூகங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன, மேலும் நமது பல்லின மற்றும் பல மத சமூகத்தில் சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்.”

திரைப்பட வகைப்பாடு வழிகாட்டுதல்களின் கீழ், “சிங்கப்பூரில் உள்ள இன அல்லது மத சமூகங்களை இழிவுபடுத்தும் எந்தவொரு பொருளும்” வகைப்படுத்த மறுக்கப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் கீழ்மட்ட இந்துத்துவா தொண்டர் வரை அனைவரும் இந்த படத்தை பாராட்டி தள்ளினர்.பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.