CAA International News

“எந்த ஒரு நடவடிக்கை எடுக்கும் முன் மறுபரிசீலனை செய்யுங்கள்” – ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு மோடி அரசு அறிவுறுத்தல் !

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் 751 உறுப்பினர்களில் 626 பேர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மீதான கடும் கட்டுப்பாடுகள் குறித்து ஆறு தீர்மானங்களை முன்வைத்துள்ளனர்.

மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் “பாரபட்சமானது” , “அபாயகரமான பிரிவினையை” ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என கூறி 5 பக்கங்கள் கொண்ட தீர்மானம் ஐரோப்பா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின. இது மோடி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து “எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னர் உண்மைகளை முழுமையாகவும், துல்லியமாகவும் மதிப்பீடு செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளுமாறு ‘ வரைவு தீர்மானத்தின் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது மோடி அரசாங்கம்.

மோடி அரசின் முரண்பாடு ? :

முதலில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவித்து விட்டு பிறகு இது இந்திய நாட்டின் உள்விவகாரம், வெளிநாடுகள் தலையிட கூடாது என்ற தொனியிலும் பதில் அளித்துளளது மோடி தலைமையிலான மத்திய அரசு.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் வரைவுத் தீர்மானத்தை நிறைவேற்ற விரும்புவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. CAA என்பது முற்றிலுமாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு பொது விவாதத்திற்குப் பிறகும், ஜனநாயக வழிமுறைகள் மூலமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகே செயல்முறைக்கு வந்துள்ளது இந்த சட்டம். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மோடி அரசின் சிஏஏ சட்டம் மத அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறது என்ற குற்றச்சாட்டிற்கான உரிய பதிலை அதில் காணமுடியவில்லை.

சிஏஏ மட்டும் இல்லை காஷ்மீர் குறித்தும் தான்:

24 நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஐரோப்பிய ஐக்கிய இடது / நோர்டிக் பசுமை இடது (/Nordic Green Left ) குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் வருகிற புதன்கிழமை விவாதிக்கப்பட்டு மறுநாள் வாக்களிக்கப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 15 வது பிரிவு மற்றும் நவம்பர் 2005 இல் கையெழுத்திடப்பட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கூட்டு செயல் திட்டம் (India-EU Strategic Partnership) மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா கருப்பொருள் (EU-India Thematic Dialogue on Human Rights) உரையாடல் ஆகியவற்றை குறித்து தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் 751 உறுப்பினர்களில், 626 பேர் CAA மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான ஆறு தீர்மானங்களை முன்வைத்துள்ளனர்.

ஐரோப்பா பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது – மோடி அரசு :

இந்த திடுக்கிடும் நடவடிக்கையை எதிர்ப்பாராத மோடி அரசு “சக ஜனநாயக நாடுகள் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை கொண்ட இந்திய பாராளுமன்றத்தின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று இந்திய அரசாங்கம் நம்பிக்கை வைத்துள்ளது” என்று பதில் அளித்துள்ளது.

இந்த பதிலின் மூலம் மோடி அரசு பணிந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த செய்திக்கு உரிய முக்கியத்துவத்தை பெரும்பாலான ஊடகங்கள் வழங்கியதாக தெரியவில்லை.

https://twitter.com/DilliDurAst/status/1221636442633326593

முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் வலதுசாரி உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து காஷ்மீருக்கு அழைத்து வந்தது மோடி அரசுக்கான “பி.ஆர் ஸ்டண்ட்” என்று பலரும் விமர்சித்திருந்தனர் என்பது குறிபிடத்தக்கது.