Israel Kashmir

“காஷ்மீரில் இஸ்ரேல் மாடலை பின்பற்றுங்கள்!” – இந்திய தூதரக அதிகாரி சர்ச்சை பேச்சு !

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் பயன்படுத்திய அதே முறைகளை இந்தியாவின் காஷ்மீரிலும் பின்பற்றி இந்துக்களை அங்கு குடியமர்த்த வேண்டும்.. இஸ்ரேல் மக்களால் இதை செய்ய முடியுமானால் நம்மாலும் இதை செய்ய முடியும் என்று அமெரிக்காவில் உள்ள இந்தியாவின் தூதரக அதிகாரி சந்தீப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் “இந்த பேச்சானது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியின் பாசிச மனநிலையைக் காட்டுகிறது” என்று கருத்து தெரிவித்துளளார். எனினும் நமது இந்திய மீடியாக்கள் இதை குறித்தெல்லாம் வாய் திறக்காமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் ஆதாயங்களுக்காக காஷ்மீரை பயன்படுத்தி வருகின்றன. எனினும் இந்த அக்கப்போரில் அகப்பட்டு கொண்டு தினம் தினம் சித்திரவதையை அனுபவிப்பதோ அப்பாவி காஷ்மீரிகள் தான்.

இந்த காணொளி வைரல் ஆனதை அடுத்து இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதற்கு பதில் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சந்தீப் எனது பேச்சு தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று மழுப்பலான பதிலை கூறி முடித்து கொண்டார்.

https://twitter.com/standwkashmir/status/1199413776577110016?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1199413776577110016&ref_url=https%3A%2F%2Fwww.aljazeera.com%2Fnews%2F2019%2F11%2Fanger-india-diplomat-calling-israel-model-kashmir-191127150235613.html