Inflation Union Government

ரெயில்களில் அதிக ‘லக்கேஜ்’ எடுத்து சென்றால் தனி கட்டணம் முதல் அபராதம் வரை;புதிய ரயில்வே விதிகள்!

இந்நிலையில், விமான பயணங்களில் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடத்தில் வசூலிக்கப்படும் கட்டண நடைமுறையை ரயில் பயணங்களிலும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

ரெயில்களில் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்காக பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும், நீங்கள் பதிவு செய்யாமல் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதைக் கண்டால், சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.

இந்த புதிய விதிகளின்படி, நீங்கள் பயணிக்கும் வகுப்பைப் பொறுத்து 35 கிலோ முதல் 70 கிலோ வரையிலான கனமான சாமான்களை எடுத்துச் செல்லலாம், மேலும் அனுமதிக்கப்பட்ட இலவச அளவை விட சாமான்களின் எடை அதிகமாக இருந்தால், நீங்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

நீங்கள் ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் 70 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம், மேலும் ஏசி 2-டையர் ஸ்லீப்பர்/முதல் வகுப்புக்கு, வரம்பு 50 கிலோவாகும். ஏசி 3-டையர் ஸ்லீப்பர், ஏசி நாற்காலி கார் மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இரண்டாம் வகுப்புக்கு, வரம்பு 35 கிலோ வரை. அதிகப்படியான சாமான்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூடுதல் லக்கேஜுக்கான புக்கிங்கை ரயில் புறப்பாட்டுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் முன்னர் வரையில் லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் பயணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது தங்கள் லக்கேஜுக்கு முன்கூட்டியே பதிவு செய்யலாம் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

“அனுப்புபவர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட முகவர் லக்கேஜில் குறைபாடுகள் அல்லது முறையற்ற பேக்கிங்கை குறித்த தகவலை பதிவு செய்யும் வரை, பாதுகாப்பாக பேக் செய்யப்படாத லக்கேஜ்கள் முன்பதிவு/ரயிலில் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று ஒரு ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய பேக்கேஜ் விதிகள் அமலுக்கு வருவதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் மிகவும் அவசியமானால் தவிர, அதிக லகேஜ்களை கொண்டு பயணிப்பதை தவிர்க்குமாறு ரயில்வே அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

“லக்கேஜ் அதிகமாக இருந்தால், பயணத்தின் மகிழ்ச்சி பாதியாக இருக்கும்! அதிக லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்யாதீர்கள். அதிகப்படியான சாமான்கள் இருந்தால், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று சாமான்களை முன்பதிவு செய்யுங்கள்.”

என சமீபத்திய ட்வீட்டில், ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.