BJP Maharashtra

மகாராஷ்டிரா: மீண்டும் முதல்வர் ஆனார் ஃபட்னாவிஸ் !

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்று நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் (NCP) ஷரத் பவார் கூறி இருந்த நிலையில் அவரது மருமகன் அஜித் பவார் அளித்த ஆதரவின் பேரில் சனிக்கிழமை அதிகாலையில் தேவேந்திர ஃபட்னாவிஸின் தலைமையில் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைந்துள்ளது.

திடீர் திருப்பமாக இன்று காலை மகாராஷ்டிராவின் முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி ஏற்றார். மேலும் என் சி பி கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றார்.”மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி டிவீடும் செய்தாகி விட்டது.