Hindutva Mosques Muslims

குல்பர்கா கோட்டையில் கோயிலை மீட்டெடுக்க வேண்டும் இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை !

இந்து ஜாக்ருதி சேனா அமைப்பினர் திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள துணை ஆணையரிடம் பஹாமனி கோட்டையில் சிவன் கோவில் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், அங்கு பூஜை செய்ய அனுமதி கோரி மனு அளித்ததுள்ளனர்.

கல்புர்கி மாவட்டத்தில் 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஹ்மானி கோட்டை, பஹ்மனி சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஹசன் பஹ்மானி ஷாவால் கட்டப்பட்டது. கோட்டைக்குள் ஜாமியா பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. சோமலிங்கேஸ்வரர் கோவிலை இடித்து பஹ்மனி ஆட்சியாளர்கள் கோட்டையை கட்டியதாக இந்துத்துவ அமைப்புகள் கூறுகின்றன.

கோட்டையின் வடகிழக்கு பகுதியில் சோமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளதாக இந்துத்துவா அமைப்பு தலைவர்கள் கூறி, அதை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குல்பர்காவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து, பஹ்மானி கோட்டையில் (பற்பல ஆண்டுகளாக) தங்கியுள்ளவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லக்ஷ்மிகாந்த் சுவாதி, “கோட்டை கட்டப்படுவதற்கு முன்பே கோட்டைக்குள் சோமேஷ்வர் கோயில் இருந்தது. கோவில் இடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவிலை சீரமைக்க கோரி, ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்,” என்றார்.

“சிவராத்திரிக்குள் கோயிலை சுத்தம் செய்து உள்ளே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், மாநிலம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினர் அனைவரும் உள்ளே பூஜை செய்வோம்,” என்றார்.