Christians Hindutva Karnataka

இயேசு கிறிஸ்து சிலை கூடாது; சங்பரிவார கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம்!

இந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம்:

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஆளும் கர்நாடகாவின் கனகாபுராவில் உள்ள கபாலா பெட்டாவில் 114 அடி உயர இயேசு கிறிஸ்துவின் சிலை நிறுவ திட்டமிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து ஜாக்ரன் வேதிகே, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிலை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தில் முனீஷ்வராவுடன் (இந்து தெய்வ சிவனின் ஒரு வடிவம்) ஒரு பழங்கால தொடர்பு (!) இருப்பதாகவும், கனகபுரா எம்.எல்.ஏ.வான டி.கே.சிவகுமார் 10 ஏக்கர் நிலத்தை எவ்வாறு கையகப்படுத்தினார் என்றும் நாஜி கொள்கையால் ஈர்க்கப்பட்ட வலதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டி.கே.சிவகுமார் மறுப்பு:

ஒரு மோசடி (!) மூலம் டி.கே.சிவகுமார் நிலம் கையகப்படுத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் உலகின் மிக உயரமான இயேசுவின் சிலையை கட்டவிருக்கும் அறக்கட்டளைக்காக 10 ஏக்கர் அரசு நிலம் வாங்கிட தனது சொந்த பணத்தை செலவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெறுப்பை உமிழும் இந்துத்துவாவினர்:

பாபர் பள்ளிவாசலை பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடிப்பதை போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது அல்லவா? அது பிரபல ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லடகா பிரபாகர் பட்டுக்கு சொந்தமானது. இவர் தான் இந்த இயேசு சிலை விவகாரத்திலும் மூக்கை நுழைந்துள்ளார். “கபாலா மலைகளில் கிறிஸ்து சிலை கட்ட அனுமதிக்க மாட்டேன். சிலை அமைவதை தடுப்பதற்கான பெரிய பொறுப்பு இந்துக்கள் மீது உள்ளது . இயேசு கிறிஸ்துவின் சிலை எங்களுக்கு தேவை இல்லை. ஆனால் அதற்கு பதிலாக நாம் பெஜாவர் சுவாமி , பசவேஸ்வர சுவாமி அல்லது பலகங்கதர சுவாமி அல்லது இந்த தேசத்திற்காக பாடுபட்ட வேறு ஒருவரின் சிலையை வேண்டுமானால் அமைக்கலாம். இந்துக்களுக்கு ஒரே ஒரு நாடு மட்டுமே உள்ளது – அது இந்தியா” என்று தனது வெறுப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“அண்டை நாடுகளைச் சேர்ந்த மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை தருவதாக அவர்கள் பெருமை பேசுகிறார்கள், அதே நேரத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலை பெங்களூரில் அமைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர். வாவ் !! ”என்று பிரபல பாடலாசிரியரும் நாத்திகருமான ஜாவித் அக்தர் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த காலத்திலும் கிருஸ்துவ வெறுப்பு:

கர்நாடகாவில் கடந்த 2008ம் ஆண்டு பஜ்ரங் தளம் மற்றும் ஸ்ரீ ராமசேனா போன்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களால் கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் தேவாலயங்களின் மீது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன.

https://twitter.com/just1doctorwala/status/1216902003181281280

அப்போது முதலமைச்சராக இருந்த பாஜக வின் பி.எஸ். எடியூரப்பாவோ, பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கும்பலை கண்டிப்பதை விடுத்து “கிறிஸ்தவ சமூகம் மாநிலத்தில் ‘ஒற்றுமை மற்றும் சமூக பதற்றத்தை உருவாக்குகிறது, கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுகிறது” என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.