Indian Judiciary Muslims Uttar Pradesh

உபி: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு; செலவை அரசே ஏற்குமாறும் உத்தரவு!

உபி காஷி விஸ்வநாத் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி பள்ளிவாசலில்இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சி செய்திட வாரணாசி சிவில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2000 ஆண்டு பழமையான காஷி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை 1669 ஆம் ஆண்டில் கியான்யாபி மசூதியைக் கட்டுவதற்காக முகலாய பேரரசர் அவுரங்கசீப் இடித்ததாக எந்த ஒரு ஆதாரமுமின்றி இந்துத்துவாவினர் கூறி வருகின்றனர், இந்நிலையில் கியான்வாபி மசூதி அமைந்துள்ள மீட்டெடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

“… மேற்கண்ட கியான்வாபி நிலத்தின் நடுவில், புராண காலத்திற்கு முன்பே சிவபெருமானின் ஸ்வாம்பு ஜோதிர்லிங்கா மற்றும் விஷேஸ்வரரின் மிகப் பழமையான கோயில் ஆகியவை இருந்தன, இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி வருகைக்கு முன்பே பள்ளிவாசல் அமைந்துள்ள நிலம் விஷேஸ்வரர் கோவிலின் ஒரு பகுதியாக இருந்தது .. இந்த கோயில் சுமார் 2050 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது.அதில் விஸ்வேஷ்வர் சிலைகளை முறையாக புனிதப்படுத்தபட்டது. மத விரோதம் காரணமாக கோவில் பல்வேறு முறை இடிக்கப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது ”என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ராமர் கோயில் பாணியில் இந்த மனுவை சிவில் நீதிமன்றத்தில் சுயம்பு ஜோதிர்லிங்கா விஸ்வேஸ்வர் (இந்துகளின் தெய்வம்) சார்பில் வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை கன்வயாபி மசூதி நிர்வாகக் குழு எதிர்த்தது, எனினும் இப்போது கியான்வாபி பள்ளிவாசலில் ஏ.எஸ்.ஐ ஆராய்ச்சி செய்திட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சர்வே தொடர்பான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாபர் பள்ளிவாசல் பாணியில் அடுத்த பள்ளியை கையில் எடுக்க அதே டெக்னீகை தற்போதும் கையாள்வதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 அரசியலமைப்பிற்கு விரோதமானது மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என்றும் வாதிட்டு பாஜக சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் இது குறித்து மத்திய அரசிடம் பதில் கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.