Indian Judiciary Muslims Uttar Pradesh

உபி: சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது என கூறி கியான்வாபி பள்ளிவசாலின் ஒளு செய்யும் பகுதிக்கு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்!

உபி: கியான்வாபி மசூதியின் ஒரு பகுதியை சீல் வைக்குமாறு கடந்த திங்களன்று வாரணாசி நீதிமன்றம், மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அங்கு வீடியோ சர்வேயின் போது ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என கூறி தற்போது அந்த பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் வீடியோ சர்வே எடுக்க வேண்டுமென கட்டாயமாக்கியதை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் மூன்று நாள் வீடியோ ஆய்வு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக திங்கள்கிழமை முடிவடைந்தது.

சீல் வைத்து பாதுகாப்பு:

சீல் வைக்கப்பட்ட பகுதியின் பாதுகாப்புக்கு மாவட்ட மாஜிஸ்திரேட், போலீஸ் கமிஷனர், போலீஸ் கமிஷனரேட் மற்றும் வாரணாசி சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் ஆகியோர் பொறுப்பாவார்கள் என்று நீதிமன்றம் மேலும் கூறியது. உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்வது லக்னோ காவல்துறைத் தலைவர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளரின் பொறுப்பு என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“நீதிமன்ற ஆணையத்தின் சர்வே முடிவடைந்துள்ளது. உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று மனுதாரர் சோகன் லால் ஆர்யா கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல் ராஜ் சர்மா, செய்தியாளர்களிடம் பேசியபோது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்தவில்லை.

“கியான்வாபி மசூதியின் சர்வே விவரங்கள் எதுவும் கமிஷனின் எந்த உறுப்பினராலும் வெளியிடப்படவில்லை. சர்வே குறித்த முழு விவரங்களை சேகரிப்பது குறித்தான பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும். ஒரு உறுப்பினர் நேற்று சில நிமிடங்கள் கமிஷனில் இருந்து தடை செய்யப்பட்டார், பின்னர் கமிஷனில் அனுமதிக்கப்பட்டார், ” என்று சர்மா கூறியிருந்தார்.

மூன்று குவிமாடங்கள், நிலத்தடி அடித்தளங்கள் மற்றும் ஒரு குளம் ஆகியவை ஆய்வுக் குழுவினரால் படமாக்கப்பட்டன. அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் பகிர்ந்து கொள்வார்கள்.

மசூதிக்குள் வீடியோ பதிவு செய்ய அனுமதி அளித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முஸ்லிம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய கோப்பு மே 17-ம் தேதி விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மனுதாரர்கள் சொன்னவை ?

NDTV செய்தியின் படி, திங்கள்கிழமை காலை குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது . அங்கு ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக, மசூதிக்குப் பின்னால் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில பூஜை செய்ய ஒரு வருடமாக அணுக முயன்ற இந்து பெண்களின் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் கூறினார்.

வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி கூறுகையில், இந்த குளம் துப்புரவு (ஒளு) சுத்திகரிப்பு சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

சுத்திகரிப்பு சடங்கு அல்லது ஒளுவுக்கு பயன்படுத்தப்படும் குளத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரினர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குளத்தை இப்போதைக்கு பயன்படுத்தக்கூடாது என வாரணாசி டிஎம்-க்கு உத்தரவிட்டது.

இதுவரை நடந்தவை:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் ஏற்கனவே இருந்த விஸ்வேஷ்வர் கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது, முகாலய விஸ்வேஷ்வர் கோவிலின் மூல லிங்கம் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் தாக்குதலின் போது அருகில் உள்ள கியான்வாபி கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டது என இந்துத்துவா தரப்பு கூறி வருகிறது.

இந்த ஆண்டு ஏப்ரலில், வலதுசாரிக் இயக்கமான விஸ்வ வேதிக் சனாதன் சங்கத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள், தினசரி தரிசனம், பூஜை மற்றும் சடங்குகள் செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று மனு தாக்கல் செய்ததை அடுத்து, அந்த இடத்தை வீடியோ ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்து தெய்வங்களான சிருங்கர் கௌரி, கணேஷ், ஹனுமான் மற்றும் பிற “பழைய கோவில் வளாகத்திற்குள் காணக்கூடிய மற்றும் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களுக்கு.” பூஜை செய்ய அனுமதி வேண்டும் என்பதே வலதுசாரி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை.

இருப்பினும் அட்வகேட் கமிஷனர் அஜய் குமார் மிஸ்ரா பாரபட்சமாக நடந்து கொண்டதால் மசூதி கமிட்டி மசூதிக்குள் வீடியோ எடுப்பதை எதிர்த்து, அவரை மாற்றுமாறு கோரியதால் சர்வே நடைபெறவில்லை.

வாரணாசி நீதிமன்றம், மே 12 வியாழன் அன்று, கணக்கெடுப்பு பணி தொடரும் என்று உத்தரவிட்டது, மேலும் மிஸ்ராவை மாற்றுவதற்கு பதிலாக, விஷால் குமார் சிங் மற்றும் அஜய் சிங் ஆகிய இரு வழக்கறிஞர்களை அவருடன் நியமித்தது. இதற்கான கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய முஸ்லிம்கள் இப்போதே ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபடாமல் எனக்கென்ன என இருப்பார்களானால் …