CAA Students

டில்லியில் 4 நாட்களில் மீண்டும் 3வது துப்பாக்கி சூடு சம்பவம் – அமித் ஷா பதவி விலக கோரி இந்திய அளவில் ட்ரெண்டிங் !!

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5 க்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் கடந்த நான்கு நாட்களில் இது மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவமாகும். ஒரு நாட்டின் தலைநகரில் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருவது, உள்துறை அமைச்சரின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.

அமித் ஷா நாட்டு மக்களை காப்பாற்றுவதில் தோல்வி அடைந்து விட்டார் என்று கூறி நெட்டிசன்கள் #AmitShahMustResign என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

amit shah resign அமித்ஷா பதவி விலகு ஜாமியா துப்பாக்கி சூடு twitter trending

ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் அறிக்கை:

தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் சிவப்பு ஜாக்கெட் அணிந்து, சிவப்பு ஸ்கூட்டரில் வந்ததாக, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடி வரும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. “அவர்களில் ஒருவர் சிவப்பு ஜாக்கெட் அணிந்து, 1532 அல்லது 1534 என்ற வாகன எண் கொண்ட சிவப்பு ஸ்கூட்டியை ஓட்டி வந்தார்” என்று ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஷஹீன் பாகில் பயங்கரவாதி கபில் துப்பாக்கி சூடு; தலைநகரில் மீண்டும் பதற்றம்!!

காவல் நிலையம் முன் மக்கள் :

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜாமியா நகர் காவல் நிலையத்திற்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர். காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 307 ன் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதவி போலீஸ் கமிஷனர் ஜெகதீஷ் யாதவ் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“பொலிஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது, கேட் எண் 5 மற்றும் 7 இலிருந்து சிசிடிவி காட்சிகளை இந்த குழு சேகரிக்கும், மேலும் வெளிவரும் விவரங்கள் [எஃப்.ஐ.ஆரில்] சேர்க்கப்படும்.நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று திரு.ஜெகதீஷ் மேலும் தெரிவித்தார்.

நாங்கள் தொடர்ந்து செயல்பட எங்களுக்கு உதவிடுங்கள்!

எப்போது துப்பாக்கி சூடு நடந்தது?

நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஓக்லாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசிம் முகமது கான் தெரிவித்தார்.

“முதலில் கேட் எண் 5 லும் பிறகு , கேட் எண் 1 ஐத் தாண்டும்போது மற்றொரு சத்தமும் கேட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இங்கே நிலைமை பதட்டமாக உள்ளது. வாகனத்தின் எண்ணை நாங்கள் குறித்து வைத்துளோம் ” என்று சம்பவத்தை நேரில் பார்த்த சட்டக்கல்லூரி மாணவர் அர்ஷான் அஃபாக் கூறினார்.

போலீசார் வேடிக்கை பார்க்க, ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களுடன் பயங்கரவாதி கோபால் ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு !

“கோட்ஸேவை போல ஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரும் ஒரு தேசியவாதியே” – இந்து மகா சபா அறிவிப்பு..

Donate us