Dalits Rajasthan

திருடியதாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..

ராஜஸ்தான்: கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தின் நகவ்ர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம் விற்கும் ஷோரூம் ஒன்றில் 2 தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பணம் திருட முயற்சித்ததாக கூறி ஷோரூமில் வேலை பார்க்கும் நபர்கள் கொடூரமாக தாக்கி, அவரது அந்தரங்க உறுப்புகளில் பெட்ரோல் மற்றும் சுகுரூ ட்ரைவரை செலுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்தும், தாக்கப்பட்ட இரு இளைஞர்களும் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 நபர்களை போலீஸ் கடுங்காவலில் எடுத்து விசாரித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கும்பல் படுகொலை; தடுக்க முயன்ற அவரது தங்கையை குழந்தையுடன் எட்டி மிதித்த மிருகங்கள்!

அதே போல் பதிலுக்கு தலித் இளைஞர்கள் திருடியதாகவும் ஷோரூம் ஊழியர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருடப்பட்ட தொகை 100 ருபாய் மட்டுமே என்று சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத், ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் சோக் கெஹ்லோட்டை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். பீம் இராணுவத்தின் ராஜஸ்தான் பிரிவினர் பாதிக்கப்பட்டவர்களை உடனே சென்று சந்திக்குமாறும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.