பள்ளிவாசல் முன் நின்று வாக்குசேகரிப்பு ; பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு
Actors BJP Tamil Nadu

பள்ளிவாசல் முன் நின்று வாக்குசேகரிப்பு ; பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு !

சென்னை: தேர்தல் நடத்தை சட்டத்தை மீறி வெள்ளிக்கிழமை மசூதி முன் பிரச்சாரம் செய்ததாக நடிகரும் பாஜக வேட்பாளருமான (ஆயிரம் விளக்குகள் தொகுதி) குஷ்பு சுந்தர் மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரச்சார விதிமுறைகளை மீறி நடிகை குஷ்பு பள்ளிவாசலுக்கு முன், அவரும் அவரது ஆதரவாளர்களும் முறையான அனுமதியைப் பெறாமல் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதை கண்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து […]

DMK Tamil Nadu

திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன், மகள் வீட்டில் ஐடி ரெய்டு !

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் அவரது மகள் செந்தமரை ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலகரை என்ற இல்லத்தைத் தவிர, தேனம்பேட்டையில் உள்ள அலுவலக வளாகத்திலும் மேலும் இரண்டு இடங்களிலும் ஐ-டி ரெய்டு நடந்து வருகின்றன. சபரீசன் பல ஆண்டுகளாக ஸ்டாலினின் நெருங்கிய ஆலோசகராக […]

BJP Tamil Nadu Telangana

பாஜக வின் தமிழக தேர்தல் அறிக்கையை தெலுங்கானா விவசாயிகள் எரித்து போராட்டம் !

தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில் தேர்தல் நடக்கவுள்ள தமிழ் நாட்டில் மஞ்சள் வாரியம் அமைப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், தெலுங்கானாவின் மஞ்சள் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். நிஜாமாபாத் மாவட்டத்தின் ஆர்மூர் நகரில், மஞ்சள் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையின் நகல்களை அவர்கள் எரித்தனர்.பாஜக வின் நிஜாமாபாத் மக்களவை […]

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம், இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் - எஸ்.பி உதயகுமார்
Activists Tamil Nadu

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம், இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் – எஸ்.பி உதயகுமார்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம். இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் என எஸ்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே வழங்கப்படுகிறது. ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய மனித உரிமைகள் மீறல் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த முக்கியமான தீர்மானத்தை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய் நின்று வரவேற்போம். பனிரெண்டு ஆண்டு […]

Tamil Nadu

கோவை: வெடிபொருட்கள் பதுக்கல் வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது !

கோவை: வெடிபொருட்கள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கேரள போலீசாரால் கோவையில் கைது செய்யப்பட்டனர். வெடிபொருள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவின் கீழ் தர்ஷன் குமார்(30), ராஜேஷ் (29) ஆகியோர் மீது கேரளா, திருச்சூர், காட்டூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை, கேரளா போலீசார் தேடி வந்த நிலையில், கோவை ரயில் நிலையம் அருகே குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக, கேரளா போலீசார், கோவை ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். உடனே களத்தில் இறங்கியே […]

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவா? - ஓர் அலசல் பார்வை
CAA DMK Intellectual Politicians Tamil Nadu

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவா? – ஓர் அலசல் பார்வை

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தை அங்கீகரிக்கின்ற வகையில் இருக்கின்ற வாசகங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ‘இதுதான் நியாயமா?’ என நல்லிதயங்களைத் துடிக்க வைப்பவையாய் இருக்கின்றன. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டு பாகுபாடு காட்டுவது திராவிட சித்தாந்தத்துக்கு நேர் எதிரானதாகும். அதற்குத் துணை போகின்ற வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருப்பது தகுமா? இந்திய வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த சிஏஏ எதிர்ப்பு மக்கள் போராட்டத்தையும், தன்னெழுச்சியாக நடந்த மகளிர் ஷாஹீன் பாக் போராளிகளையும், உயிரையே […]

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தே.மு.தி.க !
Tamil Nadu

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தே.மு.தி.க !

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது தே.மு.தி.க. இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில். “அதிமுக உடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் தே.மு.தி.க. கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. எனவே தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒருமித்த முடிவாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்துள்ளோம்.” என கூறப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என தே.மு.தி.க துணை […]

'உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது' - பாஜக முதல்வர் எடியூரப்பா அதிரடி !
Karnataka Tamil Nadu

‘உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது’ – பாஜக முதல்வர் எடியூரப்பா அதிரடி !

தமிழகம் உபரி காவிரி நீரை பயன்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது என்றும், கர்நாடக மாநில நலன்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்..

கோ பேக் மோடி ட்வீட் எதிரொலி-நடிகை ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் புகார்!
Actors BJP Tamil Nadu

கோ பேக் மோடி ட்வீட் எதிரொலி-நடிகை ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் புகார்!

மோடி தமிழகம் வருகையின் போது , பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஓவியாவும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்வீட் செய்தார். இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் என்பவர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்துள்ளார். “பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மையை காப்பதில் முக்கியமான பங்கு உடையவர். பிரதமர் தமிழகம் வரும்போது சமூக வலைதளத்தில் ‘கோ பேக் மோடி’ என கருத்தை பதவிட்டு பொது […]

டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.க அஞ்சாது, ஆர்.எஸ். பாரதி கைது குறித்து ஸ்டாலின் கருத்து ..
Political Figures Tamil Nadu

டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.க அஞ்சாது, ஆர்.எஸ். பாரதி கைது குறித்து ஸ்டாலின் கருத்து ..

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இன்று அதிகாலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர்கள் நீதிபதி ஆக முடிந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சையில் தான் என்ற கருத்துப்பட பேசி இருந்தார். இது சர்ச்சை ஆனதை அடுத்து அதற்கு வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அவர் […]

தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி ...
Tamil Nadu

தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி…

சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23.5.2020 (நாளை) முதல் (தினமும் காலை 7 மணி முதல் […]

Crimes Against Women Tamil Nadu

10 ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்ற கொடூரம் ..

விழுப்புரம் சிறு மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அதே கிராமத்தில் அதிமுக கிளை கழக செயலாளர் கலியபெருமாள் முன்னாள் கவுன்சிலர் முருகன் இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறார்கள். 95 சதவிகித தீக்காயத்துடன் போராடிய சிறுமி ஜெயஸ்ரீ இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்க செய்யும். கோவை வேளாண் கல்லூரி மாணவியர் மூவரை தர்மபுரி கொன்றவர்கள் அதிமுகவினர் சிலர், அதற்கடுத்த கொடிய சம்பவம் இது. சிறுமியை […]

சீமான் கண்டனம்
CAA Political Figures Tamil Nadu

சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு, காரணம் என்ன ?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சீமான் மீது கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில், சனிக்கிழமை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமானின் பேச்சு இரு சமூகங்களிடையே வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிட்டதாகவும் அது அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டபட்டுள்ளது. சீமான் மீது தேச துரோக […]

எளியோருக்கும் பசித்தோருக்கும் உணவளிக்கும் மே17 இயக்கத் தோழர்கள்!
Tamil Nadu

எளியோருக்கும் பசித்தோருக்கும் உணவளிக்கும் மே17 இயக்கத் தோழர்கள்!

மே17 இயக்கத் தோழர்கள் பெரும் பொருளாதார பின்னனி கொண்டவர்களல்ல. கடுமையான உழைப்பால் தம் குடும்பத்தினரோடு இச்சமூகத்தையும் பாதுகாக்கும் உறுதி பூண்டவர்கள். மிக நெருக்கடியான பொருளாதாரச் சூழலுக்கு நடுவிலும் பசித்தவர்களுக்கான உதவிகளை கடந்த ஒரு மாதமாக செய்து வருகிறார்கள். சென்னை பூந்தமல்லி, கே.கே.நகர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், காட்பாடி என பல பகுதிகளில் தோழர்கள் பணியாற்று வருகிறார்கள். தொடர்ந்து மக்களோடு துணை நிற்கிறார்கள். மறுபுறம் ‘இடுக்கண் களை’ எனும் முயற்சியால் பல்வேறு யோசனைகளை, தொடர்புகளை எளியமக்களுக்காக பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். […]

அரசு ஊழியர்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படாது-தமிழக அரசு அறிவிப்பு !
Tamil Nadu

அரசு ஊழியர்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படாது-தமிழக அரசு அறிவிப்பு !

மாநில அரசு ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களை ஒப்படைத்து பணம் பெறும் நடைமுறை ஓராண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் திரு சண்முகம் இன்று வெளியிட்டுள்ளார்.  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், வாரியம், ஆணையங்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள்/இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்களுக்கு மிகாமல், பயன்படுத்தாத  விடுப்பு நாட்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவது வழக்கமாகும். தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை […]