மத்திய நிதி அமைச்சருக்கு பாடமெடுத்த மஹுவா மொய்த்ரா ..
Political Figures

மத்திய நிதி அமைச்சருக்கு கணித பாடமெடுத்த மஹுவா மொய்த்ரா ..

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் மோடி அரசு மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. பிரதமர் வெறும் அட்வைஸ் மட்டுமே வழங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டை உண்மை படுத்தும் வகையில் கொரோனாவை எதிர்த்து களமாட மாநில அரசாங்கங்கள் கேட்கும் நிதியில் மிகவும் சிறிய அளவிலேயே மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் தமிழகமும் விதி விலக்கல்ல. மேலும் PM cares ன் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் எவ்வாறு […]

நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள் - முக.ஸ்டாலின் ..
Corona Virus Political Figures

நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள் – முக.ஸ்டாலின் ..

ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம் பிரதமருக்குப் புரியவில்லையா? என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.14) வெளியிட்ட அறிக்கையில், “கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை, இரண்டாவது கட்டமாக, மே 3-ம் நாள் வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். நோய்த் […]

தன்னார்வலர்கள் உணவு அளிக்கத் தடை செய்வது பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும்: ஜவாஹிருல்லா கண்டனம்
Political Figures Tamil Nadu

தன்னார்வலர்கள் உணவு அளிக்கத் தடை செய்வது பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும்: ஜவாஹிருல்லா கண்டனம்

”கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் நிறைவேற்றி வருகின்றன. தற்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது […]

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்! – சீமான்
Corona Virus Political Figures

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்! – சீமான்

உலக அளவில் வேகமாகப் பரவிவரும் கொரோனோ நுண்ணுயிரிப்பரவல் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் முதல் இரு நிலைகளைத் தாண்டி மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை எது நடந்துவிடக்கூடாது என்ற அச்சப்பட்டமோ அந்த ‘சமூகப் பரவல்’ தொடங்கி இப்போது இந்திய துணைக்கண்டம் முழுவதும் கொரோனோ நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் மத்திய, மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கையிலுள்ள புள்ளிவிபரங்களே சமூகப்பரவல் நாடு முழுமையும் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் நேற்றிரவு நாட்டுமக்களிடம் […]

உபி : கொரோனா பரவிவரும் வேளையில் லச்சக்கணக்கானோர் கூடும் ராமர் திருவிழாவுக்கு மாநில அரசு அனுமதி..
Corona Virus Hindutva Uttar Pradesh Yogi Adityanath

உபி : கொரோனா பரவிவரும் வேளையில் லச்சக்கணக்கானோர் கூடும் ராமர் திருவிழாவுக்கு மாநில அரசு அனுமதி..?

இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ராம் நவாமி தினத்தன்று அயோத்தியில் ஒரு மெகா நிகழ்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ராம் நவமி மேளா/கண்காட்சி வருகிற மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது இதில் லச்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வை நிகழ்வை கைவிடுமாறு மருத்துவ ஆலோசகர்கள் மாநில அரசுக்கு அறிவுறுத்திய […]

விரும்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !
Activists Arrests Hindutva Uttar Pradesh Yogi Adityanath

வரம்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !

யோகி ஆதித்யநாத் என அழைத்து கொள்ளும் உபி முதல்வர் அஜய் பிஷ்த் சிங் பதவி ஏற்றது முதல் சிறும்பான்மையினர் மீது தாக்குதல், பாலியல் வன்முறைகள் என பல்வேறு விதங்களிலும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு புதைகுழியில் உள்ளது குறித்து அனுதினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பலரை (20க்கும் மேற்பட்டோரை) சுட்டு கொன்றது அஜய் பிஷ்த்தின் காவல்துறை. மேலும் அந்த சமயத்தில் […]

'என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?' தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..
NPR Political Figures Telangana

‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..

‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை. என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சட்டசபையில் கூறி இருக்கிறார். ‘நாங்கள் நிலவுடமைக் குடும்பம்தான். ஆனால் ஒரு கிராமத்து வீட்டில்தான் நான் பிறந்தேன். ஊர்ப்பெரியவர் ஒருத்தர் “ஜென்ம நாமா” என்று எழுதிக் கொடுத்தார். அதில் அரசு சீல் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா ஒரு காகிதம்தான். எனக்கே இப்படி இருக்கும் பொழுது கிராமத்தில் வசிக்கும் தலித், பழங்குடி மற்றும் ஏழைகளை எப்படிப் போய் ஆவணம் கேட்பேன்?‘ […]

டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை எழுதிய யோகேந்திர யாதவ் ..
Delhi Pogrom Political Figures

டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை எழுதிய யோகேந்திர யாதவ் ..

டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை ‘ஸ்வயராஜ் அபியான்’ நிறுவனர் பேரா.யோகேந்திர யாதவ் எழுதியதுதான். டெல்லியில் நடந்த இந்தக் கொடூரத் தாக்குதலால் காயம்பட்டதும் பாதிக்கப்பட்டதும் நரேந்திர மோடிதான் எனத் தொடங்குகிறது அவரது கட்டுரை சுமார் 49 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அத்தனை பேரும் அப்பாவி முஸ்லிம்கள். அது குறித்து இவர் எழுதுகிறார்: “போலீசுக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்குமான மோதலாகத்தான் இது தொடங்கியது. பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவின் தூண்டுதலுக்குப் பின்பே அது ஒரு இந்து […]

கெஜ்ரிவாலின் வலதுகரம் தான் இந்த மனிஷ் குமார் சிசோடியா..
Intellectual Politicians Political Figures

கெஜ்ரிவாலின் வலதுகரம் தான் இந்த மனிஷ் குமார் சிசோடியா..

தில்லியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கிய அந்த ஞாயிறு இரவில் இந்த சிசோடியாவை முஸ்லிம் போராளிகள் ஒடோடிச் சென்று சந்தித்தார்கள். கூலிப்படையினர் படையெடுத்து வந்துள்ளார்கள். திட்டமிட்ட முறையில் தீ வைப்புகளும் சூறையாடல்களும் கை, கால்களை உடைக்கிற அளவுக்கு வன் கொடுமைகள் நடந்து வருகின்றன. ஏதாவது செய்யுங்கள் என்று குமுறினார்கள். இறுக்கமான முகத்துடன் அனைத்தையும் கேட்ட சிசோடியா, ‘தில்லி போலீஸ் எங்கக் கட்டுப்பாட்டில் இல்லை. I am same like you’ என சொல்லி இருக்கிறார். ‘தாக்குதல் நடந்து […]

Political Figures

இந்தியாவை பீடித்திருக்கும் மூன்று பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் மன்மோகன் சிங் ..

இன்றைய ஹிண்டுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் இந்தியாவை பீடித்திருக்கும் மூன்று பெரும் பிரச்சினைகளை சுட்டிக் காட்டுகிறார். பொருளாதாரச் சிக்கல், சமூக அமைதியின்மை, சுகாதார ஆபத்து. இரண்டாம் மற்றும் மூன்றாம் விஷயங்கள் முதல் விஷயத்தை மேலும் சிக்கலாக்கவே செய்யும் என்கிறார். சமூக அமைதியில்லாமல் வேறு எந்த வரி சீர்திருத்தமும், கார்ப்பரேட்களுக்கு சலுகைகளும் வேலை செய்யாது என்று வாதிடுகிறார். அவர் இந்த அரசுக்கு பரிந்துரைப்பது மூன்று விஷயங்கள்: 1) அரசின் எல்லாத் […]

'குஜராத் மாடலில் நடந்த இனப்படுகொலையே டெல்லி வன்முறை' - மம்தா பானர்ஜி
Delhi Pogrom Mamata Banerjee

‘குஜராத் மாடலில் நடந்த இனப்படுகொலையே டெல்லி வன்முறை’ – மம்தா பானர்ஜி

டெல்லியில் நடந்த கலவரங்களிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மத்திய பாஜக அரசு கொரோனா வைரஸ் குறித்த பீதியைப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி சேனல்களில் ஒரு பகுதியினர் இந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய முதலமைச்சர், கொரோனா வைரஸ் பீதியை ஒரு சாக்காக வைத்து டெல்லி கலவரம் குறித்த செய்திகளை மத்திய அரசு மறைக்க பார்ப்பதாக அவர் குற்றம் […]

யோகி ஆதித்யநாத்
Intellectual Politicians Yogi Adityanath

யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிக்காது – உபி முதல்வர் கண்டுபிடிப்பு !

தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களை நீக்க முடியும் என்று உ.பி. முதல்வர் அஜய் பிஷ்த் சிங் ஞாயிற்றுக்கிழமையன்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. உபி யில் உள்ள ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழாவைத் துவக்கி வைத்து பேசிய அஜய் பிஷ்த், யோகா மூலம் உடலை ‘ஃபிட்டாக’ வைத்துள்ளவர்கள் கொரோனா வைரஸ் போன்ற நோய்களுக்கு அஞ்சத் தேவையில்லை என பேசியுள்ளார். “யோகாவுக்குள் மிகப்பெரிய […]

டெல்லி கலவரத்துக்கு சங்பரிவார் தான் காரணம் - பினராயி விஜயன் ..
Kerala Political Figures

டெல்லி கலவரத்துக்கு சங்பரிவார் தான் காரணம் – பினராயி விஜயன் ..

வன்முறையைத் தடுக்கவும், டெல்லியில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவரவும் மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை வலியுறுத்தி உள்ளார். மக்களின் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதற்கு சங்க பரிவார் எடுத்த நடவடிக்கையின் விளைவாக இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பினராயி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய தலைநகரில் மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் எனவும் வெறுப்பு பிரச்சாரங்களும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாக […]

சீமான் கண்டனம்
Delhi Political Figures Tamil Nadu

டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! – சீமான் | நாம் தமிழர் கட்சி.

இந்தியத்தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மதக்கலவரமும், இசுலாமியர்களுக்கு எதிரானத் தொடர் தாக்குதல்களும் அதிர்ச்சியளிக்கின்றன. குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் நடைபெற்று வரும் போராட்டங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு போராடுவோர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கோரத்தாக்குதல் நிகழ்த்தப்படுவதும், போராட்டக்களங்கள் வன்முறைக்களங்களாக மாற்றப்பட்டு ஆளும் வர்க்கத்தின் துணையோடு மதரீதியாக நாட்டைத் துண்டாடும் முயற்சிகள் நடப்பதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனத்தின் அடிநாதமான மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை சிதைத்தழித்து, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்நாட்டின் பன்முகத்தன்மையையைத் தகர்த்து ஒற்றைமயமாக்கும் […]

thiruma
Amit Shah Delhi Thol. Thirumavalavan

’குஜராத் மாடலை’ டெல்லியில் நிகழ்த்த திட்டம் ; அமித்ஷா பதவி விலகவேண்டும்! – தொல்.திருமா அறிக்கை

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் இந்த கலவரத்துக்கும் சாவுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் […]