europe
CAA International News

ஐரோப்பா: 24 நாடுகளை சேர்ந்த 154 அவை உறுப்பினர்கள் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்..

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் “பாரபட்சமானது” , “அபாயகரமான பிரிவினையை” ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என கூறி 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. போராட்டக்காரர்களை சந்தித்து, சட்டத்தை ரத்து செய்வதற்கான அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என இந்திய அரசாங்கத்கத்தை வலியுறுத்துகிறது இந்த தீர்மானம். தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும்? இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) “உலகின் மிகப்பெரிய நிலையற்ற நெருக்கடியைத் தூண்டக்கூடும், […]

hamid karzai
CAA International News

‘அனைவரையும் சமமா நடத்துங்க!’ – முன்னாள் ஆப்கான் அதிபர் இந்தியாவுக்கு கோரிக்கை !!

மோடி அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ மற்றும் கொண்டு வர துடிக்கும் என்ஆர்சி, என்பிஆர் போன்றவற்றிற்கு எதிராக இந்திய மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வேளையில் ஆப்கான் நாட்டின் முன்னாள் அதிபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் சமமாக நடத்த வேண்டும் என ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். “ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் என யாருமே இல்லை. ஆப்கானிஸ்தான் நாடே நீண்ட […]

pakistan india modi imran khan
International News Pakistan

இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கும் மோடி அரசு ..

டெல்லியில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. எஸ்.சி.ஓ வில் அங்கம் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகள் 4 பார்வையாளர்கள் மற்றும் பிற சர்வதேச உரையாடல் கூட்டாளர்களுக்கும் ( international dialogue partners) அழைப்பு விடுக்கப்படும். பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை […]

mjuqtada
International News Iraq

‘அமெரிக்க படைகளே வெளியேறு’- ஈராக்கில் மாபெரும் பேரணி அறிவிப்பு!

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ள நிலையில் அமெரிக்க படைகளை வெளியேற்ற “மில்லியன் மக்கள் பேரணி ” நடத்துவதற்கு ஈராக்கின் ஜனரஞ்சக ஷியா தலைவர் முக்தாதா அல் சதர் அழைப்பு விடுத்துள்ளார். ஈராக்கின் வானம், நிலம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு படைகளின் ஆக்கிரமிப்பின் மூலம் மீறப்படுகின்றன என அவர் கூறி உள்ளார். எனினும் இதற்கான இடம், தேதி பற்றிய விவரங்களை அவர் அறிவிக்கவில்லை. “ஈராக்கிய மண்ணில் அமெரிக்க தொடர்ந்து […]

camels australia killing
Australia International News

ஆஸ்திரேலியா: 10,000 ஒட்டகங்களை சுட்டு கொல்ல முடிவு!

ஆஸ்திரேலியாவில் பரவிவரும்  காட்டுத்தீயால் இதுவரை  23 பேர் பலியாகி உள்ளனர். கோடிக்கணக்கான விலங்குகளும் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில் 10 ஆயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடியே  சுட்டுக்கொல்லப் போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மக்கள் அவதி: சூடான மற்றும் சங்கடமான சூழ்நிலைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது, ஏனென்றால் ஒட்டகங்கள் வந்து வேலிகளைத் தட்டுகின்றன, வீடுகளைச் சுற்றி வந்து ஏர் கண்டிஷனர்கள் மூலம் தண்ணீரைப் பெற முயற்சிக்கின்றன, ” என்று அவர் கூறினார். பழங்குடியின ஆஸ்திரேலிய மக்கள் வசிக்கும் […]

Norwerian tourist
CAA International News NRC

CAA – NRC போராட்டக்களத்தில் பங்கெடுத்த நார்வே சுற்றுலாப்பயணி வெளியேற்றம் !

இந்திய ஒன்றியம் கொண்டுவந்த CAA – NRC சட்டங்களுக்கு எதிரான அமைதி பேரணியில் கலந்துகொண்ட காரணத்திற்காக நார்வே நாட்டு சுற்றுலாப்பயணி ஜேன் மேட்டி ஜோஹன்ஸன் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இவர் கடந்த அக்டோபரில் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்து கொச்சியில் தங்கியுள்ளார். மக்கள் நடத்திய பேரணியில் அவரும் ஆர்வத்துடன் பதாகை ஏந்தி கோஷங்களை எழுப்பியுள்ளார். அவரது பேஸ்புக் தளத்திலும் தாம் பங்குபெற்ற பேரணி பற்றிய படங்களை பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்து இந்திய அரசு இவரை […]

trump impeachment in tamil
America International News

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி நீக்கப்படுவாரா?

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதை செய்யாவிட்டால் உக்ரைனுக்கு தருகிற […]

rohingya Gambia
International News Muslims Rohingya

ரோஹிங்கியா இன படுகொலை – காம்பியா நாடு சர்வதேச நீந்திமன்றத்தில் புகார்!

காம்பியா…..காம்பியா….. மியான்மரின் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு நீதி வேண்டி, காம்பியா நாட்டு பிரதிநிதிகள் தாமாக முன்வந்து டென்மார்க் நாட்டில் அமைந்திருக்கும் சர்வதேச நீதி ஆணையமான “International Court of Justice” ல் புகாரளித்திருந்தது. அதற்கான ஹியரிங் கடந்த மூன்று நாட்களாக டென்மார்க்கின் ,ஹாக் நகரத்தில் அமைந்துள்ள நீதி ஆணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த காலங்களில் பட்ட அவதிகளையும் இன்னல்களையும் விடியோ ஆதாரங்களாகவும் , ஐநா துருப்புகள் அளித்த சாட்சியங்களை சமர்ப்பித்தும் காம்பியா நாட்டு நீதித்துறை அமைச்சர் அபுபக்ர் […]

AMit shah
America Amit Shah CAA International News

அமித்ஷா மீது நடவடிக்கை – அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் எச்சரிக்கை!

குடியுரிமை சட்ட திருத்த மசோத இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டால் அமித்சா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. […]

ஐநா சர்வதேச நீதிமன்ற
International News Pakistan

ஐநா மன்றத்தில் கேரள சிறுபான்மை சமூகத்து பெண்!

சசமையலறையில் சோறு பொங்கவும், குழந்தை பெற்று வளர்க்கவும் மட்டும் பழக்கப்பட்டவர்கள் மலபாரி முஸ்லிம் பெண்கள் எனும் அவப்பெயர் சமீபகாலமாக பல படித்த, உத்யோகஸ்த்தத்தில் சாதித்த பெண்களின் வாயிலாக துடைத்தெறியப்பட்டு வருகிறது. இந் நிலையில் சமீபத்தில் துபையில் நடைபெற்ற சர்வதேச நீதிமன்ற பரிபாலனங்கள் கமிட்டியில் உரையாற்றிய ரிதா ஸஹர் மஹ்மூத், தற்போது தனது கருத்துக்களத்தை ஐநா மன்றம் வரை எடுத்துச்சென்றுள்ளார். கேரள, கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியை சேர்ந்த இவர் துபையின் மிடோஸ் எமிரேட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவியாவார். […]

masjid singapore
International News

வீடற்றவர்களுக்காக இனி பள்ளிவாசலில் தங்குமிடம் !

சிங்கப்பூரில் வசதி குறைந்த பல தொழிலாளர்கள் வீடில்லாமல் இரவு நேரங்களில் தெரு ஓரங்களில் உறங்கி வருகின்றனர் என்பதை அறிந்த சிங்கப்பூரில் உள்ள மஸ்ஜித் சுல்தான் நிர்வாகம் வீடற்றவர்களுக்காக தரைத் தளத்தை ஒதுக்க முன் வந்துள்ளது. ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த  இடமானது பள்ளிவாசல் வளாகத்திலுள்ள ஒரு கட்டிடத்திலாகும். மேலும் இன மத வேறுபாடுகளின்றி யார் வேண்டுமானாலும் தங்களுக்கு ஒரு நிரந்தர தங்குமிடம் அமையும் வரை இங்கு தங்கி கொள்ளலாம் என்று பள்ளிவாசல் நிர்வாகி முஹம்மத் ஐஸுதீன் தெரிவித்துளளார்.  இரவு […]

baghdadi sister isis turkey
International News

முன்னாள் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவனின் மனைவி பிடிபட்டார்!

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள்  தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மனைவிகளில் ஒருவரை துருக்கி அரசாங்கம் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று (6-11-19) தெரிவித்துள்ளார். அமெரிக்க இராணுவ படையினர் பாக்தாதியை பிடிக்க முயன்றபோது உடையில் அணிந்திருந்த குண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி அமெரிக்க அரசு ஒரு பெரும் பிரச்சாரத்தையே நடத்தியது. நாங்கள் அவருடைய மனைவியைக் கைது செய்துள்ளோம், எனினும் அவர்களைப் போல பரபரப்பு ஆக்கி கொண்டு அலையவில்லை என்று […]

angela kashmir
International News Kashmir

‘காஷ்மீர் மக்களின் நிலை நல்லதாக இல்லை-இப்படியே தொடர்வது சரி இல்லை’- ஜெர்மன் நாட்டு அதிபர் !

மூன்று நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜெர்மன் நாட்டு பிரதமர் அங்கேலா மேர்க்கெல், “தற்போது காஷ்மீரில் மக்களின் நிலைமை நல்லதாக இல்லை, நிலைமை தொடர்வதற்கு ஏதுவாகவும் இல்லை. நிலைமை நிச்சயமாக சீராக மேம்படுத்தப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மோதியுடனான சந்திப்பின் போது நிச்சயம் வலியுறுத்துவேன்” என்று நேற்று (1-11-19) கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது மோதி அரசங்கத்தின் பரப்புரையான “காஷ்மீரில் எல்லாம் நலம். மக்கள் மகிழ்சியாக உள்ளனர்” என்பதற்கு நேர் எதிராக அமைந்து உள்ளது […]

palestine
International News Palestine

போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியரை சுட்டு கொன்ற இஸ்ரேல் !

கடந்த மார்ச் 2018 இல் தொடங்கிய வாராந்திர ஆர்ப்பாட்டங்களின் தொடரான ​​”கிரேட் மார்ச் ஆஃப் ரிட்டர்னில்” பங்கேற்க ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் பிரிக்கும்  வேலி அருகே கூடினர். அப்போது இஸ்ரேலிய அராஜகத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் ஒருவரை சுட்டு கொன்றுள்ளது ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படை. போராட்டக்கார்களின் மீதான இந்த தாக்குதலின் போது 54 பாலஸ்தீனியர்கள்  படுகாயம் அடைந்தனர்.அவர்களில், 22 பேர் துப்பாக்கி தோட்டாக்களால் காயம் அடைந்துள்ளனர். வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள […]

Protesters outside ICRC headquarters in Al-Bireh.
International News Palestine

இஸ்ரேல் கொடூர சித்திரவதை! – சமரை விடுவிக்க கோரி பாலஸ்தீனியர்கள் போராட்டம்!

பாலஸ்தீனிய கைதிகளை சித்திரவதை செய்வதை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள சமர் அர்பிட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரி பாலஸ்தீனிய மனித உரிமைகள் மற்றும் சமூக அமைப்புகள் தெருக்களிலும் சமூக ஊடகங்களிலும் அணிதிரண்டு வருகின்றன. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள சமர் அர்பிட்டின் உயிரைப் பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) உடனே தலையிட்டு அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர்கள் குறிப்பாக அழைப்பு விடுத்துள்ளனர். 44 வயதான சமர் மூன்று […]