‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: யோகி அரசால் கைது செய்யப்பட்டுள்ள சித்திக் கப்பனின் மனைவி வேதனை
Activists Arrests Islamophobia Journalist Muslims Uttar Pradesh

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..

யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் […]

தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..
Activists Arrests Indian Judiciary NIA Political Vendetta

தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..

மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்கள் அவையில் அளித்த விவரங்களின்படி, 2016, 17, 18 மூன்றாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3005; கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3974; விவரம் : 2016, 2017, 2018 ஆண்டுகளில் UAPA சட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையே 922, 901, 1182. ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை: 999, 1,554 , 1,421 ஆகும். இந்த மூன்று ஆண்டுகளிலும் தலா 232, 272 ,317 […]

Activists Arrests

‘பா.ஜ.கவைத் தோற்கடிப்போம் எனும் முழக்கத்தை எடுத்த சில நாட்ககளிலேயே UAPA சட்டத்தின் கீழ் தோழர்கள் கைது!’ – மார்க்ஸ் அந்தோணிசாமி

“பா.ஜ.கவைத் தோற்கடிப்போம்” – எனும் முழக்கத்தை எடுத்த அடுத்த சில நாட்கள் முதல் கொடும் UAPA சட்டத்தின் கீழ் தோழர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த ஆபத்தான ஜனநாயக விரோதப் போக்கிற்கு உரிய எதிர்ப்பைக் காட்டவில்லை

https://newscap.in/disha-ravi-arrest-activist-modi-gov/
Activists Arrests

திஷா ரவி கிறிஸ்தவர் என பரப்பும் வலது சாரிகள்; யார் இந்த திஷா ?

பெங்களூரைச் சேர்ந்த 21 வயது மாண‌வி திஷா ரவி பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு பிரச்சார ஆவணத்தினை பிப்ரவரி 4-ம் தேதி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த ஆவணத்தினை தயாரித்ததில் திஷா ரவி-க்கு பங்கு இருப்பதாக குறிப்பிட்டு அவ‌ரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. சுவீடனில் திஷா: 2018-ம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்காக […]

இந்துக் குடும்பங்கள் ஆலயம் கட்ட இடம் அளித்த ஷர்ஜில் இமாமின் குடும்பத்தார்; இன்று இவரை தான் மோடி அரசு கைது செய்து வைத்துள்ளது.!
Activists Arrests Hindus Muslims

இந்துக் குடும்பங்கள் ஆலயம் கட்ட இடம் அளித்த ஷர்ஜில் இமாமின் குடும்பத்தார்; இன்று இவரை தான் மோடி அரசு கைது செய்து வைத்துள்ளது.!

ஷர்ஜில் இமாம். நினைவிருக்கிறதா இவரை ?அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முடித்துவிட்டு தற்போது இந்திய வரலாறு குறித்த மேலாய்வுக்காக டெல்லி ஜே.என்.யூவில் சேர்ந்துள்ள நிலையில் இன்று டெல்லி போலீசால் – அதாவது மோடி அரசால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வெளியே வரமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற பிரச்சினைகளில் நியாயம் வேண்டி எழுதியும் பேசியும் வருகிற நாமும் கூட இவர் மீதான இந்தக் கொடும் நடவடிக்கை குறித்து ஒன்றும் எழுதாமல் போன குற்ற […]

டெல்லி: லக்கடவுனில் வேட்டையாடப்படும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்; கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு 20 க்கும் மேற்பட்ட திரைத்துறையினர் கூட்டறிக்கை..
Activists Arrests CAA

டெல்லி: லாக்டவுனில் வேட்டையாடப்படும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்; கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு 20 க்கும் மேற்பட்ட திரைத்துறையினர் கூட்டறிக்கை..

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை எதிர்த்து ஜனநாயக உரிமையின் அடிப்படையில் போராடியதற்காக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை தற்போது டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், மகேஷ் பட், ரத்னா பதக் ஷா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட திரைப்பட பிரமுகர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளனர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்ததாகக் கூறி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களான மீரன் ஹைதர் மற்றும் சஃபூரா சர்கர் […]

விரும்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !
Activists Arrests Hindutva Uttar Pradesh Yogi Adityanath

வரம்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !

யோகி ஆதித்யநாத் என அழைத்து கொள்ளும் உபி முதல்வர் அஜய் பிஷ்த் சிங் பதவி ஏற்றது முதல் சிறும்பான்மையினர் மீது தாக்குதல், பாலியல் வன்முறைகள் என பல்வேறு விதங்களிலும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு புதைகுழியில் உள்ளது குறித்து அனுதினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பலரை (20க்கும் மேற்பட்டோரை) சுட்டு கொன்றது அஜய் பிஷ்த்தின் காவல்துறை. மேலும் அந்த சமயத்தில் […]

azad
Activists Arrests CAA Indian Judiciary

“ஜாமா பள்ளி என்ன பாகிஸ்தானா? போராடுவதில் என்ன தவறு?” – பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

இன்று டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் ஜாமீன் மனு விசாரணையின் போது, கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் டெல்லி காவல் துறையினரை கடுமையாக சாடினார். பீம் இராணுவத் தலைவரான ஆசாதுக்கு “போராட்டத்தின் மூலம் தனது எதிர்ப்பை தெரிவிக்க இந்திய அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது ” என்று கூறினார். நீதிபதியின் சரமாரியான கேள்விகள்: “தர்ணாவில் ஈடுபடுவதில் என்ன தவறு உள்ளது ? எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன தவறு? எதிர்ப்பை வெளிப்படுத்துவது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமை […]

sadaf
Activists Arrests CAA Uttar Pradesh

உபி : சமூக ஆர்வலர் சதாஃபை வயிற்றில் உதைத்து, லத்தியாலும் தாக்கிய போலீஸ்-10 நாட்கள் மேலாகியும் பெயில் இல்லை.

செத்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்- சதாஃப் சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகருமான சதாஃப் ஜாஃபர், கடந்த 19ந்தேதியன்று , லக்னோவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது படம்பிடித்து கொண்டிருந்த அவரை போலீசார் அநியாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். ஆரம்பத்தில் ஜாஃபர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றே தெரியாமல் தவிக்கவிட்ட போலீஸ் 2நாட்கள் கழித்த பிறகே அவரது சகோதரிக்கு அவர் இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மீரா நாயர் போன்ற திரைத்துறையினர் சமூக ஊடகத்தின் வாயிலாக […]

arundhathi roy
Activists Arrests CAA NRC

‘போலி தகவல்களை கொடுத்து விடுங்கள்’ -அருந்ததி ராய் கூறும் அர்த்தமுள்ள யோசனைகள்..

டெல்லி பல்கலையில் கடந்த 26ம் தேதி CAA , NRC, NPR ஆகியவற்றை எதிர்த்து போராட்ட உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியதாவது , ” NRC – NPR ஆகியவற்றிற்காக அதிகாரிகள் உங்களிடம் கணக்கெடுக்க வந்தால் பொய்யான பெயரையும், போலியான தகவலையும் கொடுத்து அவர்களை விரட்டிவிடுங்கள், பிறந்த சான்றிதழ், ஆதார் கார்டு, முகவரிச்சான்று, டிரைவிங் லைசன்ஸ் என எது கேட்டு வந்தாலும் அவர்களுக்கு காண்பிக்காதீர்கள். போலீசாரிடம் லத்தி அடி வாங்கவும், புல்லட்டுகளால் துளைக்கப்படவும் நாம் இங்கே […]

sudha bharadwaj
Activists Arrests

பிரபல பெண் சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜ் கைது மற்றும் என் ஆர் சி முறைகேடுகள் குறித்து சஷி தரூர் பாராளுமன்றத்தில் விளாசல்!

மனித உரிமை ஆர்வலர் சுதா பரத்வாஜ் உலக புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கழைக்கழக கண்காட்சியில் “சட்டம் மற்றும் கொள்கை துறைகளில் உலகெங்கிலும் உள்ள பெண்களின் வியக்கத்தக்க பங்களிப்புகளை” வெளிப்படுத்திய உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பாஜக ஆளும் அரசாங்கத்தின் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கடுமையாக தாக்கி பேசினார். இந்த […]