டில்லி கலவர வழக்கில் மகன் கைது; பிச்சை எடுத்து குழந்தைகளை காப்பாற்றும் முஸ்லிம் பெண்மணி !
Alleged Police Brutalities Delhi Pogrom Indian Judiciary Muslims

டில்லி கலவர வழக்கில் மகன் கைது; பிச்சை எடுத்து குழந்தைகளை காப்பாற்றும் முஸ்லிம் பெண்மணி !

மூன்று குழந்தைகளை கொண்ட 50 வயதான முஸ்லீம் பெண்மணி தபஸ்ஸும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டில்லி கலவர வழக்கில் ஷஹாபுதீன் என்ற அவரது மகன் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து விட்டது. கணவர் மற்றும் மூத்த மகன் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர், பிறகு அவரது மகன் ஷாஹாபுதீன் மட்டுமே அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்தார். இவரை தான் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது தபஸ்ஸும் தனது குழந்தைகளுடன் வடகிழக்கு […]

டில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் வக்கீலின் அலுவகத்தில் டில்லி போலீசார் மீண்டும் சோதனை..
Delhi Pogrom Muslims

டில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வரும் வக்கீலின் அலுவலகத்தில் டில்லி போலீசார் மீண்டும் சோதனை..

கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாசிச பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் பலர் உயிர் இழந்தனர், முஸ்லிம்கள் வீடுகள் சூறையாடப்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டனர். பாதிக்கபட்டவர்கள் மீதே டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் என்று பலரும் எடுத்துக்காட்டி வருகின்றனர். இந்த வழக்குகளில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட பலருக்கும் மெஹ்மூத் பிராச்சா வழக்கறிஞராக இருந்து வருகிறார். மெஹ்மூதின் சட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியின் “குற்றச்சாட்டு ஆவணங்கள்” மற்றும் “அவுட் பாக்ஸின் மெட்டாடேட்டா” ஆகியவற்றைத் தேடுவதற்காக […]

delhi pogrom
Crimes Against Women Delhi Pogrom

‘டெல்லி போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கடுமையாக துன்புறுத்தினர்’ – இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் குமுறல்!

வடகிழக்கு டில்லியின் வடக்கு கோண்டாவை அடுத்துள்ள சுபாஷ் மொஹல்லாவைச் சேர்ந்த சுமார் 10 பெண்கள் ஒன்றுகூடி கடந்த 08/08/20 அன்று மாலை பஜன்புரா காவல்நிலையம் சென்று இருதினங்களுக்கு முன்பாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான FIR நகல் வேண்டுமென கோரியுள்ளனர்.  கூட வந்த பிற பெண்கள் வெளியில் காத்திருந்த நிலையில் ஷஹீன் கான், ஷன்னோ, அவருடைய 17 வயது மகள் ஆகிய மூன்று  பெண்கள் மட்டும் பஜன்புரா காவல்நிலையத்தின் உள்ளே சென்று FIR நகலைக் கோரியுள்ளனர். அப்போது அங்கிருந்த […]

டெல்லி கலவரத்தின் போது காயமடைந்த ஜாவிதையே கைது செய்த போலீசார்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!
Delhi Pogrom Muslims

டெல்லி கலவரத்தின் போது காயமடைந்த ஜாவிதையே கைது செய்த போலீசார்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

டெல்லி: பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக ஏப்ரல் 19 அன்று 22 வயது ஜாவித் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பிரிஜ்புரியில் உள்ள ஒரு மசூதிக்குள் இருக்கும் போது தான் தாக்கப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்ததாகவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் சாக்கில் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் முஸ்தபாபாத்தில் வசிக்கும் ஜாவித், தயல்பூர் காவல் நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளதாக […]

டெல்லி: ஜாமியா மாணவி சஃபூரா கைது; ஊரடங்கின் போது கைது செய்யப்படும் முஸ்லிம்கள்!
Delhi Pogrom Islamophobia Muslims Students

டெல்லி: ஜாமியா மாணவி சஃபூரா கைது; ஊரடங்கின் போது அடுத்தடுத்து கைது செய்யப்படும் முஸ்லிம்கள்!

டெல்லியில் CAA,NRC,NPR சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டத்தை இந்திய முழுவதும் கொண்டு செல்ல காரணமானவர்கள் டெல்லி ஜாமியா மாணவர்கள் அதில் குறிப்பாக யார் எல்லாம் முன் எடுத்தார்களோ அவர்களை இப்போது டெல்லி காவல்துறை திட்டமிட்டு கைது செய்து வருகிறது நான்கு நாட்களுக்கு முன்பாக சகோதரர் மீரான் ஹைதர் கைது செய்ய பட்ட நிலையில்.. நேற்று சனிக்கிழமை மாலை போராட்டத்தை பெண்கள் மத்தியில் மிக வேகமாக முன் எடுத்து சென்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவி சகோதரி சஃபூரா […]

டெல்லி: பெயரை கேட்டு போலீசார் இழுத்து செல்கின்றனர்...குமுறும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்..
Delhi Pogrom Muslims

டெல்லி: ‘பெயரை கேட்டு போலீசார் இழுத்து செல்கின்றனர்’…குமுறும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்..

சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்ட படுகொலைகளின் போது பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஐமபத்துக்கு மேற்பட்ட உயிர்பலி, அனைத்தையும் இழந்து நிர்கதியாக ஆதரவின்றி தவிக்கும் மக்களிடமே மீண்டும் சென்று பாதிக்கப்பட்ட அந்த அப்பாவிகளை போலீசார் இழுத்து செல்வதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர் .இது குறித்து தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. “Bas naam poochte hain aur utha lete hain…Har gali se 4 se 5 ladke utha rakhe […]

பி.எஃப்.ஐ இன் டெல்லி தலைவர், செயலாளர் கைது வேட்டைக்கு பி.எஃப்.ஐ கண்டனம் - போராட்டத்துக்கு அழைப்பு ..
Delhi Pogrom

பி.எஃப்.ஐ இன் டெல்லி தலைவர், செயலாளர் கைது வேட்டைக்கு பி.எஃப்.ஐ கண்டனம் – போராட்டத்துக்கு அழைப்பு ..

பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர், செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது வேட்டையை எதிர்த்து போராடுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, மாநில செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் தில்லி காவல்துறையின் சிறப்புக் குழுவால் “டெல்லி கலவரத்தின் போது மக்களைத் தூண்டினர்” என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். பெயரிடப்படாத தில்லி காவல்துறை அதிகாரியை மேற்கோள் காட்டிய IANS […]

டில்லி: இந்துத்துவ கும்பலால் எரிக்கப்பட்ட 19 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களின் புகைப்படங்கள்...
Delhi Pogrom Hindutva Muslims

டில்லி: இந்துத்துவ கும்பலால் எரிக்கப்பட்ட 19 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களின் புகைப்படங்கள்…

டெல்லி படுகொலைகளின் போது 19 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக டெல்லி வக்ஃப் வாரியத் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ வுமான அமனத்துல்லா கான் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல்கள் புனர்நிர்மான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் தொடங்கிய படுகொலைகள் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது, இதில் குறைந்தது 14 மசூதிகள் மற்றும் ஒரு சூஃபி தர்கா ஆகியவை இந்துத்துவ கும்பலால் எரிக்கப்பட்டன. பள்ளிவாசலைகளுக்குள் நுழைந்த பாசிச கும்பல், […]

மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்து ...
Corona Virus Delhi Pogrom Modi

மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்து …

மார்ச் 17 அன்று ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கவிருந்த மாபெரும் பேரணியை பங்களாதேஷ் அரசு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்தாகியுள்ளது. பங்களாதேஷில் இதுவரை மூன்று பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. டெல்லியில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பங்களாதேஷில் பிரமாண்டமான மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது. அதில் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு திரும்ப பெற வேண்டும், மோடி பங்களாதேஷிற்குள் […]

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !
Delhi Pogrom Hindus Pakistan

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !

கராச்சி: கடந்த மாதம் இந்திய தலைநகரில் பாசிஸ்டுகளின் வன்முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுத்துச் சென்றனர். மேலும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை (இன்று) ஆரவாரமின்றி மிகவும் அமைதியான முறையில் கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் சிறுபான்மையினர்: 210 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் 2 சதவிகிதம் இந்துக்கள் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் தெற்கு சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். ஆண்டு தோறும் ஹோலி பண்டிகையின் […]

டில்லியில் முஸ்லிம்களுக்கு உதவிய சீக்கியர்கள்; உபியில் சீக்கியர்களுக்காக நிலத்தை விட்டு கொடுத்த முஸ்லிம்கள்!
Delhi Pogrom Muslims Sikhs

டில்லியில் முஸ்லிம்களுக்கு உதவிய சீக்கியர்கள்; உபியில் சீக்கியர்களுக்காக நிலத்தை விட்டு கொடுத்த முஸ்லிம்கள்!

கடந்த பத்தாண்டுகளாக சீக்கிய மற்றும் முஸ்லிம்களிடையே நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த குருத்வாரா-பள்ளிவாசல் இடம் தொடர்பான வழக்கில் முஸ்லிம்கள் அந்த இடத்தை சீக்கியர்களுக்கே விட்டுக் கொடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் சஹ்ரான்பூர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரம். இந்த நகரத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா உள்ளது. 2010ம் ஆண்டு குருத்வாராவை விரிவாக்கம் செய்ய அருகிலிருந்த ஒரு இடத்தை வாங்கி அந்த இடத்திலிருந்த கட்டிடத்தை இடித்துள்ளனர். அதில் பழைய மசூதிக் கட்டிடமும் ஒன்று. பள்ளிவாசல் இடத்தை சொந்தம் கோரி […]

டில்லி இனப்படுகொலை: "எனது கழுத்தில் கயிறை கட்டி, குப்பை கிடங்கில் வீசி சென்றனர்"
Delhi Pogrom Lynchings Muslims

டில்லி இனப்படுகொலை: “எனது கழுத்தில் கயிறை கட்டி, குப்பை கால்வாயில் வீசி சென்றனர்”

கீழே தரப்பட்டுள்ளது சர்வதேச ஊடகமான வைஸ் நியூஸ் ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு .. புது தில்லியின் தெருக்களில் துணி விற்பவர் இம்ரான் கான். வியாபாரம் முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைத் தடுத்து அவரது பெயரைக் கேட்டது. அவர் இம்ரான் என -எளிதாக அடையாளம் காணக்கூடிய முஸ்லீம் பெயரை- கூறியவுடன் பனிரெண்டுக்கும் அதிகமான நபர்கள் அவரை இரும்பு கம்பிகள், சுத்தியல்கள் மற்றும் கம்புகளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.. அதிக அளவில் இந்துக்கள் வசிக்கும் சிவ் […]

டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை எழுதிய யோகேந்திர யாதவ் ..
Delhi Pogrom Political Figures

டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை எழுதிய யோகேந்திர யாதவ் ..

டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை ‘ஸ்வயராஜ் அபியான்’ நிறுவனர் பேரா.யோகேந்திர யாதவ் எழுதியதுதான். டெல்லியில் நடந்த இந்தக் கொடூரத் தாக்குதலால் காயம்பட்டதும் பாதிக்கப்பட்டதும் நரேந்திர மோடிதான் எனத் தொடங்குகிறது அவரது கட்டுரை சுமார் 49 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அத்தனை பேரும் அப்பாவி முஸ்லிம்கள். அது குறித்து இவர் எழுதுகிறார்: “போலீசுக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்குமான மோதலாகத்தான் இது தொடங்கியது. பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவின் தூண்டுதலுக்குப் பின்பே அது ஒரு இந்து […]

டெல்லி இனப்படுகொலை : ரூபினாவுக்கு நிகழ்ந்த கொடூரம் !
Delhi Pogrom

டெல்லி இனப்படுகொலை : ரூபினாவுக்கு நிகழ்ந்த கொடூரம் !

புதுதில்லி: ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். வழிநெடுகிலும் அந்த வீதி சுடுகாடு போல காட்சியளிக்கிறது. கட்டடத்தின் கீழ் […]

'குஜராத் மாடலில் நடந்த இனப்படுகொலையே டெல்லி வன்முறை' - மம்தா பானர்ஜி
Delhi Pogrom Mamata Banerjee

‘குஜராத் மாடலில் நடந்த இனப்படுகொலையே டெல்லி வன்முறை’ – மம்தா பானர்ஜி

டெல்லியில் நடந்த கலவரங்களிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மத்திய பாஜக அரசு கொரோனா வைரஸ் குறித்த பீதியைப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி சேனல்களில் ஒரு பகுதியினர் இந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய முதலமைச்சர், கொரோனா வைரஸ் பீதியை ஒரு சாக்காக வைத்து டெல்லி கலவரம் குறித்த செய்திகளை மத்திய அரசு மறைக்க பார்ப்பதாக அவர் குற்றம் […]