CAA Uttar Pradesh Yogi Adityanath

உபி: அதிகாலை 4 மணிக்கு பெண் போராட்டக்காரர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை குண்டு ..

அசாம்கர் போராட்டக்காரரர்கள் மீது உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். எஃப்.ஐ.ஆரின் படி, போராட்டக்காரரர்கள் மீது கலகம் விளைவித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகள் பதியபட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தின் அசாம்கர் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவிக்க கூடியிருந்த சுமார் 200 பெண்கள், பிப்ரவரி 5, புதன்கிழமை அதிகாலையில் காவல்துறையினரால் லத்திசார்ஜ் செய்யப்பட்டனர்.

வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் !

பிப்ரவரி 4ம் தேதியின் காலை முதல் அசாம்கரின் பிலாரியாகஞ்ச் பகுதியில் உள்ள மவ்லானா ஜோஹர் அலி பூங்காவில் மக்கள் கூடிவந்தனர். சுமார் 300-400 பேர் வரை அங்கு கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் வீடுகளுக்குள் போலீசார் பலவந்தமாக நுழைந்து அவர்களை அடித்து உதைத்ததாகவும், பின்னர் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று விட்டதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். கைதிகளின் சரியான எண்ணிக்கையை இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை..

தடியடி , கண்ணீர்ப்புகைக் குண்டு :

பிப்ரவரி 5 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் போராட்டம் நடைபெற்று வந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்து சேர்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். காவல்துறையினர் வரும் போதே பேருந்துகளுடன் வந்ததாகவும், அதன்பிறகு அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தியது மட்டுமின்றி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அமைதியாக தொழுது கொண்டிருந்த பெண்கள் மீது அராஜகம் :

‘CAA மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (NRC) க்கு எதிராக அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 150-200 பெண்கள் அதிகாலை நேரத்தில் தொழுது கொண்டிருந்தனர். அப்போது திடீரென காவல்துறையினர் எல்லா திசைகளில் இருந்தும் பெண்களை சூழ்ந்து கொண்டதாக’ போராட்டக்காரர்களில் ஒருவரான யாஸ்மீன் கான் ஆங்கில பத்திரிக்கை (The Quint) ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆண்கள் மீது தாக்குதல் :

போராட்டகளத்திலிருந்து எங்களை அகற்றிட அவர்கள் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தினர். அப்படி இருந்தும் நாங்கள் உறுதியாக இருப்பதை கண்ட அவர்கள், ஆண்களைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். பிறகு எங்கள் மீது செங்கற்களையும், கற்களையும் வீச தொடங்கினர் போலீசார். சிறிது நேரத்தில் தடியடி நடத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல பெண்கள் காயமடைந்தனர்.

உயிருக்கு போராடி வரும் பெண் :

‘பெண்கள் நாள் முழுவதும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் போராட்டத்தை கைவிடுமாறு நிர்வாகம் வலியுறுத்தியது. எனினும் பெண்கள் கேட்கவில்லை. அமைதி போராட்டத்தை தொடரவே செய்தனர்.

போலீசாரின் தாக்குதலின் போது ஒரு பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவர் இப்போது ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். போலீசார் நடத்திய தாக்குதலில் போது குழந்தைகளும் காயமடைந்ததாக’ போராட்டத்தில் பங்குகொண்ட மற்றொரு பெண்ணான ஹபீஸ் டேனிஷ் ஃபலாஹி தெரிவித்துள்ளார்.

படுமோசமாக செயல்படும் உபி போலீஸ் :

போராட்டக்காரர்கள் அங்கு கூடிவருவதைத் தடுக்க காவல்துறையினர் போராட்ட அரங்கில் லிட்டர் கணக்கில் தண்ணீரை ஊற்றியுள்ளனர்.

லிட்டர் கணக்கில் தண்ணீரை ஊற்றியுள்ளனர்.

தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் மாநிலமான உபியில் மட்டும் இந்திய சட்டம் செல்லுபடி ஆகாதா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

போலீஸ் அராஜகத்தை எதிர்த்து போராட்டம்