Actors BJP Tamil Nadu

கோ பேக் மோடி ட்வீட் எதிரொலி-நடிகை ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் புகார்!

மோடி தமிழகம் வருகையின் போது , பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஓவியாவும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்வீட் செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் என்பவர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்துள்ளார். “பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மையை காப்பதில் முக்கியமான பங்கு உடையவர். பிரதமர் தமிழகம் வரும்போது சமூக வலைதளத்தில் ‘கோ பேக் மோடி’ என கருத்தை பதவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் செயலில் நடிகை ஓவியா ஈடுபடுவதாகவும், இறையாண்மையை கெடுக்கும் வகையில் நடிகை ஓவியா செயல்பட்டுள்ளதாகவும் புகரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்ரோக வழக்கு தொடர வேண்டும்:

மேலும் ஒற்றை ட்வீட் செய்ததற்காக அவர் மீது தேசத்ரோக வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் அலெக்சிஸ் கருத்து தெரவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “விசாரணை அதிகாரிகள் வெளிநாடுகளுடனான அவரது கடிதப் பரிமாற்றத்தையும் தகவல்தொடர்புகளையும் சரிபார்க்க வேண்டும் என்றும், அவர் வன்முறைச் செயல்களின் அடிபடையில் அவர் இந்திய தேசியத்தைச் சேர்ந்தவரா என்பதைப் அறிந்து கொள்ள அவரது பாஸ்போர்ட்டையும் பரிசோதிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

பாஜக மறுப்பு:

எனினும், புகார் அளித்தவர் பெயர் வரை தெளிவாக்கப்பட்ட பின்னரும் பாஜகவின் மாநிலத் தலைவரும் சமூக ஊடகத் தலைவருமான சி.டி.ஆர் நிர்மல் குமார் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட வில்லை என மறுத்தார். “தங்களை ஒரு பிரபலமாகக் காட்டிகொள்ளும்  எந்தவொரு நபருக்கும் எதிராக பாஜக சட்டப் பிரிவில் இருந்து எந்த புகாரும் கொடுக்ககப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஓவியாவை போல லட்சகணக்கான ட்வீட் கள் அதிகரித்தமையால் #GoBackModi  என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.