Dalits Hindutva RSS

நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி!

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் பேரணிக்கு இன்று அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த பேரணி நாக்பூரின் ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்மிருதி மந்திர் முன் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

போலீசார் மறுப்பு:

ரஷிம்பாக் மைதானத்தின் உரிமையாளர்களான சிபி & பெரார் எஜுகேஷன் சொசைட்டியிடம் உரிய தொகை வழங்கப்பட்டு முறையான அனுமதியையும் பெற்ற பிறகு ஆசாத்தின் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என கூறி உள்ளூர் கோட்வாலி காவல் நிலையத்தில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டது.

போலீசார் ஏன் அனுமதி மறுத்தனர்?:

காவல்துறையினர் முன்வைத்த ஆட்சேபனைகளில் ஒன்று பீம் இராணுவத்தின் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு நிலைப்பாடு பற்றியது, இந்த இடத்தில் பேரணியை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே கோட்வாலி காவல் நிலையத்திற்கு எதிராக பீம் இராணுவத்தின் நாக்பூர் பிரிவு, பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் இது குறித்து வழக்கு தொடர்ந்தது.

ஆர்எஸ்எஸ் கோட்டைக்குள் நுழைந்த வீரன்:

ஆர்.எஸ்.எஸ்ஸின் நிர்வாக தலைமையகமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்மிருதி மந்திருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் ரேஷிம்பாக் மைதானம் அமைந்துள்ளது. நாக்பூரில் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி உள்ளிட்டவர்கள் ஸ்மிருதி மந்திரில் தான் இருப்பர் .

சங் பரிவாரில் மிக முக்கியமான உரையாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ’விஜயதஷ்மி பேச்சு உட்பட நாக்பூரில் உள்ள அனைத்து முக்கிய ஆர்.எஸ்.எஸ் நிகழ்வுகளும் ஒவ்வொரு ஆண்டும் இந்த மைதானத்தில் தான் நடைபெறுகின்றன. இந்நிலையில் இங்கு சந்திரசேகர் ஆசாத் கூட்டம் நடத்தினால் சனாதனத்தை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எப்படி உணர்வார்கள் என்பதை சொல்லி தான் தெரியவேண்டிய அவசியமில்லை.

நீதிமன்றம் கண்டனம்:

ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சித்தாந்தத்தை எதிர்க்கிறது என்ற காரணத்தால் அனுமதி மறுப்பது தவறு. இவ்வாறு செய்வது ஜனநாயக மீறல். எந்த ஒரு தகுதியான காரணமும் இன்றி பேரணிக்கு தடை விதிப்பது ஜனநாயக உரிமையை மறுப்பதாகும் என போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்து சந்திரசேகர் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது பாசிச கும்பலுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.