BJP Corruption

இந்தியா உக்ரைன் இடையிலான ராணுவ ஒப்பந்த ஊழலை புதைத்த மோடி அரசு !

ரபேல் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் மோடி அரசின் மீது உக்ரைன் ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்த விவகாரம் பெரிய அளவில் ஊடக வெளிச்சம் பெரும் முன்னரே புதைக்கப்பட்டு விட்டது குறித்து தற்போது டிஎம்சி தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு உக்ரைன் ₹17.55 கோடி லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊழலை மோடி அரசு எவ்வாறு புதைத்தது:

👇

  1. 2018 ஆம் ஆண்டில், உக்ரைனின் தேசிய ஊழல் எதிர்ப்புப் பணியகம் (NAB), பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் குறித்த விசாரணைக்கு உதவுமாறு இந்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
  2. இந்திய விமானப்படையின் AN-32 விமானங்களை மேம்படுத்த உக்ரைனுடனான ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு ₹17.55 கோடி கிக்பேக் கொடுக்கப்பட்டதாக உக்ரைனின் ஊழல் தடுப்பு நிறுவனம் கூறியது.
  3. அந்தக் கடிதத்தில் இந்திய ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை “சாட்சி” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  4. இருந்தபோதிலும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு விசாரணை கூட இல்லாமல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார். “சாட்சி” அதிகாரி பதவி உயர்வு பெற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பப்பட்டார்.

கேள்வி: நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடியால் பாதுகாக்கப்படுபவர் யார்?

மேலும் ஒரு முக்கியமான, தேசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில், இந்த ₹17.55 கோடி ஊழல் ஏன் புதைக்கப்பட்டது? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து வட இந்திய ஊடகங்களின் ஆங்கில செய்தி இணையதளங்கள் அப்போதே சிறு அளவிலாவது செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் தமிழக ஊடகங்கில் இது குறித்தான செய்தி காணக்கிடைகவில்லை.