Intellectual Politicians RSS

“அகண்ட பாரதம்” சாத்தியமே; பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் எங்களுடையதாகவே கருதுகிறோம்’- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு ..

“அகண்ட பாரதம்” அமைப்பதற்கான தேவை உள்ளது, இது இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நல்லது என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வியாழக்கிழமை புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை “நம்முடையது” என்று மோகன் பகவத் வர்ணித்தார், மேலும் தற்போது அங்கு வசிக்கும் மக்கள் என்ன நடைமுறையில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்றார். ‘தேசியவாதம்’ என்ற வார்த்தையைத் தவிர்க்க விரும்புகிறோம், ஏனெனில் இது ‘ஹிட்லர், நாசிசம்’ என்பதைக் குறிப்பதாக அமைகிறது என அவர் கூறினார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை எங்களுடையது என்று நாங்கள் கருதுகிறோம். அவர்கள் எங்களுடன் இருந்தால், அவர்கள் எதை பின்பற்றுகிறார்கள் என்றோ, என்ன சாப்பிடுகிறார்கள் என்பதுவோ ஒரு பொருட்டாக இருக்காது. அது காலனித்துவம் அல்ல. இந்தியா வாசுதேவ குடும்பகம் என்பதை நம்புகிறது (உலகம் ஒரு குடும்பம்).

“அகண்ட பாரதம்” சாத்தியமே என்று கூறிய, ஆர்.எஸ்.எஸ் தலைவர், இந்தியாவின் பிரிவினை ஏற்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட இது சாத்தியமற்றது என்ற நிலையே இருந்தது.’ என்றும் ‘ஒவ்வொரு இந்தியரும் ஒரு இந்து, பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் கண்டுபிடிப்பது இந்துத்துவா’ என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் உள்ள மக்களே சொத்துக்கு இல்லாமல் பலர் வறுமையில் மடியும் நிலையிலும், சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள், அத்துமீறல்கள் என உள்நாட்டில் லச்சம் பிரச்னை இருக்க ஆர்.எஸ்.எஸ் எதை பற்றி பேசி கொண்டி இருக்கிறது பாருங்கள் என விமர்சகர்கள் கருத்து தெறிவிக்கின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர் மற்றும் பூட்டான் ஆகியவை ஒரே நாடு என்ற நிலையை உண்டாக்க வேண்டும் என்பதே “அகண்ட பாரதம்”. சித்தாந்தம்